»   »  ஐஸ் இடத்தில் கரீனா!

ஐஸ் இடத்தில் கரீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா ராய் பெற்று வந்த சம்பளத்தை இப்போது கரீனா கபூர் பெற ஆரம்பித்துள்ளார்.

இந்த சினிமாவில் ராசியில்லாத ராணி அந்தஸ்தில் இருந்து வந்தவர் ஷில்பா ஷெட்டி. பிக் பிரதர் நிகழ்ச்சியில், பங்கேற்ற நேரம் நல்ல நேரமோ என்னவோ, படு வேகமாக பிக் அப் ஆகி படு பிசியானவராக மாறி விட்டார் ஷில்பா. அப்படியும் கூட ஷில்பாவுக்குப் புதிதாக படங்கள் எதுவும் தேடி வரவில்லை என்பதுதான் இங்கு முக்கிமயான மேட்டர்.

ஷில்பாவைப் போலவே ராசியில்லாத நடிகைகள் பட்டியலில் இருந்து கொண்டிருப்பவர்தான் கரீனா கபூர். சமீப காலமாக கரீனா நடித்த படம் எதுவும் போணியாகவில்லை, போண்டி லிஸ்ட்டில் சேர்ந்துள்ளன.

இருந்தாலும் கரீனாவின் கிளாமருக்கு இன்னும் மவுசு குறைந்தபாடில்லை. கரீனாவின் கிளாமருக்காக அவர் கொடுத்த நட்டுப் படங்களை சகித்துக் கொள்ளும் அளவுக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் பக்குவமாக உள்ளனர்.

சமீபத்தில் கரீனா கபூரை, அஷ்டசித்திவிநாயக் சினி விஷன் என்ற நிறுவனம் ரூ. 6 கோடி கொடுத்து மூன்று படங்களுக்கு கரீனாவை புக் பண்ணியுள்ளது. இது பாலிவுட்டில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரீனாவுக்கு தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம், ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம் என்பதுதான் இந்த ஆச்சரியத்துக்குக் காரணம். ஐஸ்வர்யா, ஒரு படத்துக்கு 2 கோடி வாங்குகிறார்.

ஹிட் படங்களை விட தோல்விப் படங்களையே அதிகம் கொடுத்துள்ளவர் கரீனா. அப்படி இருந்தும் பெரிய சம்பளம் கொடுத்து அவரை புக் செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால் கரீனாவின் கிளாமருக்குக் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் இது. அவரது நடிப்பை விட கிளாமருக்கே அதிக மவுசு இருப்பது இப்போது ருசுவாகியுள்ளது. மூன்று படங்களிலும் கரீனாவின் கிளாமர் கரைபுரண்டோடப் போகிறது என்ற பேச்சும் எழுந்துள்ளது.

ரசிகர்களுக்கு ஜாலிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil