'செக்ஸி' கரீனா கபூர் 'சிக்ஸி' ஆகிறார்..!
மும்பை: செக்ஸியாக காட்சியளித்தார்.. சைஸ் ஜீரோவானார்.. பின்னர் சின்னதாக மீடியம் சைஸ் பீரோவாகவும் மாறினார்.. இப்போது சிக்ஸ் பேக் அவதாரம் பூணப் போகிறாராம்.
சுத்தி என்ற படத்திற்காகத்தான் இந்தப் புது கெட்டப்புக்கு மாறுகிறாம் கரீனா.
சிக்ஸ் பேக் வைப்பது இப்போது சினிமாவில் பேஷனாகி வருகிறது என்றாலும் ஹீரோக்களைப் போல ஒரு ஹீரோயின் சிக்ஸ் பேக் வைப்பது மெய்யாலுமே நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கரண் மல்ஹோத்ராவின் சுத்தி
கரண் மல்ஹோத்ரா இயக்கும் படம்தான் இந்த சுத்தி.

முதல் இந்திய சிக்ஸி நடிகை
இதுவரை செக்ஸியானவர், சைஸ் ஜீரோ நடிகை என்றெல்லாம் அழைக்கப்பட்ட கரீனா கபூர், இந்திய நடிகைகளிலேயே சிக்ஸ் பேக் வைக்கும் முதல் நடிகை என்ற பெயரையும் பெறவுள்ளார்.

கடுமையான உடற்பயிற்சி
சிக்ஸ் பேக் வைப்பதற்காக கடுமையான உடற் பயிற்சிகளையு்ம் தொடங்கவுள்ளார் கரீனா.

தற்காப்புக் கலையும் பயில்கிறார்
கூடவே, தற்காப்புக் கலையையும் பயிலவுள்ளாராம். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஹ்ரித்திக் ரோஷன் ஜோடி
இந்தப் படத்தில் கரீனாவுடன் ஜோடி போடவிருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன் ஆவார்.

ரோஷனுக்கு எத்தனை பேக்கோ..!
கரீனாவிடம் சிக்ஸ் பேக் வைக்குமாறு கூறியவர் இயக்குநர் கரண்தான். அவருக்கே என்றால், ஹ்ரித்திக் ரோஷனிடம் எத்தனை பேக் கேட்பாரோ....


Click it and Unblock the Notifications











