»   »  எங்கிருந்தாலும் வாழ்க: முன்னாள் காதலரை வாழ்த்த தயாராகும் நடிகை கரீனா கபூர்

எங்கிருந்தாலும் வாழ்க: முன்னாள் காதலரை வாழ்த்த தயாராகும் நடிகை கரீனா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது முன்னாள் காதலரும், நடிகருமான ஷாஹித் கபூரின் திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூரும், நடிகர் ஷாஹித் கபூரும் 3 ஆண்டுகள் காதலித்தனர். பிற பிரபலங்கள் தங்கள் காதலை யாருக்கும் தெரியாமல் மறைக்கையில் அவர்கள் மட்டும் வெளிப்படையாக காதலை ஒப்புக் கொண்டனர், அது பற்றி பேசினர்.

3 ஆண்டுகளாக காதலித்த அவர்கள் கடந்த 2007ம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

கரீனா

கரீனா

ஷாஹித் கபூரை பிரிந்த கரீனா நடிகர் சைப் அலி கானை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஷாஹித் நடிகை பிரியங்கா சோப்ராவை காதலித்தார். ஷாஹித்தும், பிரியங்காவும் சேர்வதும், பிரிவதுமாக இருந்தனர்.

ஷாஹித்

ஷாஹித்

ஷாஹித் கபூருக்கும் டெல்லியைச் சேர்ந்த மீரா ராஜ்புட் என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.

திருமணம்

திருமணம்

ஷாஹித் கபூரின் திருமண விழாவில் கலந்து கொள்வீர்களா என்று கரீனாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், என்னை அழைத்தால் நிச்சயம் திருமண விழாவிற்கு செல்வேன் என்றார்.

நடிப்பு

நடிப்பு

ஷாஹித் கபூர் ஒரு சிறந்த நடிகர். அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவருக்காக நான் சந்தோஷப்படுகிறேன். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்றார் கரீனா கபூர்.

English summary
Bollywood actress Kareena Kapoor told that she would attend the wedding of her former boyfriend Shahid Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil