»   »  நிச்சயம் 'மம்மி' ஆவேன், ஆனால் தற்போதைக்கு இல்லை: நடிகை கரீனா கபூர்

நிச்சயம் 'மம்மி' ஆவேன், ஆனால் தற்போதைக்கு இல்லை: நடிகை கரீனா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இத்தனை நாட்களாக குழந்தையே வேண்டாம் என்று இருந்த பாலிவுட் நடிகை கரீனா கபூர் தற்போது தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள கரீனா கபூர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார். காரணம் அவர் சல்மான் கான் ஜோடியாக நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் ஹிட்டாகியுள்ளது தான். கரீனா நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பிறகு கரீனாவின் கர்ப செய்தியை பலரும் எதிர்பார்த்தனர்.

வேண்டாம்

வேண்டாம்

திருமணம் செய்து கொண்டால் குழந்தை பெற்றுத் தான் ஆக வேண்டுமா. எனகக்கு குழந்தை எல்லாம் வேண்டாம் என்று கரீனா முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.

குழந்தைகள்

குழந்தைகள்

தற்போதைக்கு குழந்தை பெறும் திட்டம் இல்லை. அதில் நான் தெளிவாக உள்ளேன். ஆனால் நிச்சயம் ஒரு நாள் தாயாவேன். நான் தாயாவது அடுத்த 2, 3 ஆண்டுகளில் நடக்காது என்கிறார் கரீனா.

படம்

படம்

திருமணமானாலும் நான் கமர்ஷியல் உள்பட பல படங்களில் நடித்து வருகிறேன். குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு படத்திலும் நடிப்பது லேசான காரியம் அல்ல என்று கரீனா தெரிவித்துள்ளார்.

கான்கள்

கான்கள்

பேவஃபா படத்தில் அனில் கபூரின் மனைவியாக நடித்தேன். தற்போது பால்கியின் படத்தில் அர்ஜுன் கபூர் ஜோடியாக நடிக்கிறேன். நான் பாலிவுட்டின் அனைத்து கான்களுடனும் தற்போதும் நடித்து வருகிறேன். நான் இளம் வயதில் இருந்து நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் கரீனா.

கரீனா

கரீனா

34 வயதாகும் கரீனா அடுத்த 3 ஆண்டுகளுக்கு தாயாக விரும்பவில்லை. தாய்மையை தள்ளிப்போடும் நவீனகால பெண்களில் கரீனாவும் ஒருவர். பல பிரபலங்கள் கர்ப்பத்தை தள்ளிப்போடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Kareena Kapoor, who married Saif Ali Khan in October 2012, has expressed her desire to become a mother but not in the next two-three years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil