»   »  நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை!

நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தி சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த போதே, 2012-ம் வருடம் நடிகர் சயிஃப் அலி கானைத் திருமணம் செய்தார் நடிகை கரீனா கபூர்.

 Kareena Kapoor Khan-Saif Ali Khan have blessed with baby boy

இந்த நட்சத்திர தம்பதிக்குத் இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தைமுர் அலி கான் பட்டோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்த தகவல் வெளியானவுடன், பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் - சயிஃப் அலி கானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.

மகன் பிறந்தது குறித்து கரீனாவும் சயீஃபும் இப்படிக் கூறியுள்ளனர்:

"எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோம். அனைத்து பத்திரிகை மற்றும் நலம் விரும்பிகளுக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்."

English summary
Kareena Kapoor Khan-Saif Ali Khan have blessed with baby boy and wishes pour in from Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil