»   »  'அந்த ஒரு' கன்டிஷனுக்கு ஒத்துக்கிட்டதால் தான் சயிபை திருமணம் செய்தேன்: நடிகை கரீனா

'அந்த ஒரு' கன்டிஷனுக்கு ஒத்துக்கிட்டதால் தான் சயிபை திருமணம் செய்தேன்: நடிகை கரீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை திருமணம் செய்ய ஒரேயொரு நிபந்தனை விதித்தது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான 2 குழந்தைகளின் தந்தையான நடிகர் சயிப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களில் அவர் கர்ப்பமாகவில்லையே என்ற பேச்சு கிளம்பியது.

அதற்கு தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று கரீனா தெரிவித்தார்.

குழந்தை

குழந்தை

குழந்தையே வேண்டாம் என்று இருந்த கரீனா தற்போது தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு சயிபும் சம்மதம் தெரிவித்துள்ளாரம்.

சயிப்

சயிப்

நான் சயிப் அலி கானை திருமணம் செய்ய ஒரேயொரு நிபந்தனை தான் விதித்தேன். அதாவது ஆயுள் முழுவதும் நான் படங்களில் நடிப்பேன், அதை அவர் ஆதரிக்க வேண்டும் என்பது தான். என் நிபந்தனையை அவர் ஏற்றதால் திருமணம் செய்தேன் என்று கூறியுள்ளார் கரீனா.

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

கரீனாவின் முன்னாள் காதலரான ஷாஹித் கபூரும், சயிப் அலி கானும் சேர்ந்து ரங்கூன் படத்தில் நடித்து வருகிறார்கள். படத்தில் நடிக்கையில் ஷாஹிதும், சயிபும் நண்பர்களாகிவிட்டனர். இந்நிலையில் ஷாஹிதின் மனைவி மீரா கர்ப்பமாக இருக்கும் விஷயம் முதலில் கரீனாவுக்கு தான் தெரியுமாம். கூறியது வேறு யாரும் அல்ல ஷாஹித் தான்.

கரீனா

கரீனா

கரீனாவும், ஷாஹித் கபூரும் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு உட்தா பஞ்சாப் என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். பல ஆண்டுகள் கழித்து அவர்கள் ஜோடி சேர்ந்துள்ள படம் ஜூன் மாதம் ரிலீஸாக உள்ளது.

English summary
Kareena Kapoor Khan says her sole condition for marrying actor Saif Ali Khan was that she would work all her life and he would support her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil