»   »  பக்குவமான 35... முதுமைச் சுருக்கம் அழகோ அழகோ... சொல்கிறார் கரீனா கபூர்!

பக்குவமான 35... முதுமைச் சுருக்கம் அழகோ அழகோ... சொல்கிறார் கரீனா கபூர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 35 வயது என்பது மிகப் பக்குவமான வயது என்றும், அந்த வயதில் தோன்றும் முதுமைச் சுருக்கங்களும் ஒரு அழகு தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகை கரீனா கபூர்.

பிரபல ஹிந்தி நடிகையான கரீனா கபூர் தற்போது கபீர் கானின் பஜ்ரங்கி பைஜான் மற்றும் அபிஷேக் சௌபேயின் உத்டா பஞ்சாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளில் இருந்து வேறுபட்டு நடிப்பில் மட்டுமே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில், கடந்த மாதம் கரீனா தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

35 வயதினிலே...

35 வயதினிலே...

இது தொடர்பாக கரீனா கூறுகையில், ‘ஆமாம் என் வயது 35 தான். இதை நான் மறைக்க எந்த அவசியமும் இல்லை.

பக்குவமான வயது...

பக்குவமான வயது...

இந்தப் பருவம் மிகவும் அழகானது. மிகவும் பக்குவமான இந்த வயதை நான் ஏன் மறைக்க வேண்டும்?

ஆண்களின் முகச் சுருக்கம்...

ஆண்களின் முகச் சுருக்கம்...

சில ஆண்கள் முகச் சுருக்கங்களோடு இருந்தாலும் அவர்கள் செக்சியாகவும், அறிவாளிகளாகவும் இருக்கிறார்கள். எனவே, நான் மட்டும் ஏன் எப்போதும் 18 அல்லது 22 வயது பெண்ணாகவே இருக்க வேண்டும்.

வயது ஒரு பிரச்சினையில்லை...

வயது ஒரு பிரச்சினையில்லை...

என் வாழ்க்கையில் நான் எல்லாக் கட்டங்களையும் பார்த்து விட்டேன். எனவே வயது ஒரு பிரச்சினையாக எனக்குத் தோன்றவில்லை.

அதுவும் அழகு தான்...

அதுவும் அழகு தான்...

சிலரைப் போல முதுமைச் சுருக்கங்களை நான் மறைக்க மாட்டேன். அதுவும் அழகு தான் ‘ என பளிச்சென பேசியிருக்கிறார் கரீனா.

English summary
Bollywood’s fit and fabulous Kareena Kapoor is on her way to turn 35, and she’s clear about not attempting to be 22! She feels the key to ageing gracefully lies in letting the “lines” be, especially when it comes to men. ”I think one should age gracefully. I am proud to be 34 and I think ageing is wonderful. I hate it when I look at somebody and know that they have tried to cover the lines,” Kareena told IANS in an interview on a recent visit to the capital.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil