»   »  ரூ.20 கோடி கேட்டு மருந்து நிறுவனம் மீது வழக்கு தொடரும் நடிகை கரீனா கபூர்

ரூ.20 கோடி கேட்டு மருந்து நிறுவனம் மீது வழக்கு தொடரும் நடிகை கரீனா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன் பெயரை பயன்படுத்தி உடல் எடை குறப்பு மருந்தை விளம்பரம் செய்யும் நிறுவனத்திடம் ரூ.20 கோடி கேட்டு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

பாலிவுட் நடிகை, நடிகர்கள் பல பொருட்களை விளம்பரம் செய்து அவற்றை மக்களை வாங்கும்படி கூறுகிறார்கள். மக்களும் ஆமீர் கான் கூறிவிட்டார், கரீனா கபூர் பரிந்துரைக்கிறார், ஐஸ்வர்யா ராய் கூறுகிறார் என்று அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை வாங்குகிறார்கள்.

இப்படி விளம்பர படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் தங்களின் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் பெறுகிறார்கள்.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் எங்கள் நிறுவன மாத்திரைகளை உட்கொண்டு 13 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார் என்று மருந்து நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரம் தொடர்பான செய்தி இணையதளம் ஒன்றிலும் வெளியாகியுள்ளது.

கரீனா

கரீனா

தனது பெயரை கூறி ஒரு நிறுவனம் விளம்பரம் செய்வது குறித்து கரீனா கபூருக்கு கடந்த வாரம் தான் தெரிய வந்துள்ளது. என்னை ஒப்பந்தம் செய்யாமல் என் பெயரை பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்வதா என்று கரீனா கோபம் கொண்டார்.

வழக்கு

வழக்கு

விளம்பரம் குறித்து அறிந்த கரீனா தனது சட்டக் குழுவை அணுகி என்ன செய்வது என்பது பற்றி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் அந்த நிறுவனத்திடம் ரூ.20 கோடி கேட்டு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். மேலும் விளம்பரம் குறித்த செய்தியை வெளியிட்ட இணையதளத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் தீர்மானித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மாத்திரை

மாத்திரை

கரீனா தனது உடல் எடையை குறைக்க எந்த மாத்திரையும் சாப்பிடவில்லை. அவர் தவறான தகவல்களை பரப்பி தனது ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Kareena Kapoor Khan has decided to sue a pharma company for Rs. 20 crore for using her name to advertise a weight loss pill.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil