»   »  தமிழில் கரீனா கபூர்?

தமிழில் கரீனா கபூர்?

Subscribe to Oneindia Tamil

எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்துக்கு பாலிவுட் பதுமை கரீனா கபூரை கதாநாயகியாக்க முயற்சித்து வருகிறார்.

கரீனா கபூர். பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவரது அக்கா கரீஷ்மா கபூரை விட அதிகபாப்புலாரிட்டி இவருக்கு கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக பாலிவுட்டில் அதிக சம்பளம்வாங்கும் நடிகை இவர்தான்.

க்யாமத் பட இயக்குநர் ஹாரி பவேஜாவின் அடுத்த படத்தில் நடிக்க ரூ.2.5 கோடி வாங்கியிருக்கிறாராம்.இதுவரைக்கும் சூப்பர் ஹிட் என்று சொல்லும்படியான படம் எதிலும் இவர் நடிக்கவில்லை என்றாலும்,தயாரிப்பாளர்கள் இப்படிப் பணத்தைக் கொட்ட காரணமும் இருக்கிறது.

நடிப்பிலும் சரி, கவர்ச்சியிலும் சரி கரீனா படுதாராளம். மேலும் புகழ் பெற்ற ராஜ்கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்என்ற பந்தா துளியும் கிடையாது. எந்தக் கேரக்டர் என்றாலும் ஓகே தான். சில மாதங்களுக்கு முன்பு வெளியானசமேலி படத்தில் விலைமாதுவாக நடித்துக் கலக்கினார். அதுக்காக சிவப்பு விளக்குப் பகுதி பெண்கள் சிலரைச்சந்தித்து, அவர்களது நடை, உடைகளை ஸ்டடி செய்தாராம்.

இதனால்தான் மணிரத்னம் உட்பட பெரிய இயக்குநர்களின் சாய்ஸாக இவர் இருக்கிறார். யுவா (ஆய்த எழுத்துபடத்தின் இந்தி வெர்ஷன்) படத்தில் விவேக் ஓபராய்க்கு ஜோடியாக (தமிழில் த்ரிஷா பண்ணிய ரோல்) இவர்நடித்ததை மணிரத்னமே மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

இம்மாம் பெரிய நடிகையான கரீனாவைத்தான் தனது பி.எப் (பெஸ்ட் பிரண்ட்) படத்துக்காக தமிழுக்குஇஸ்துக்கினு வர எஸ்.ஜே.சூர்யா முயற்சித்து வருகிறார்.

ஏற்கனவே கரீனாவுக்கும், சூர்யாவுக்கும் நல்ல பழக்கம் உண்டு. எஸ்.ஜே.சூர்யா, குஷி படத்தை இந்தியில் ரீமேக்செய்தபோது, அதில் கரீனா கபூர்தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது கரீனா எஸ்.ஜே.சூர்யாவுக்குப்ரெண்ட் ஆகிவிட்டாராம்.

அதனால் பி.எப். படத்தில் நடிக்க அவர் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கையில் சூர்யா இருக்கிறார்.

சூர்யாவைப் பத்தி ஒரு நியூஸ். அண்மையில் இவர் நடித்து இயக்கி, தயாரித்து வெளிவந்த நியூ படத்தைப் பார்த்தமகளிர் அமைப்புகள் எல்லாம் கொதித்தெழுந்து விட்டன. படம் ரிலீஸான தியேட்டர்களுக்குச் சென்று முதலில்கண்டன ஆர்பாட்டம் செய்தார்கள்.

அப்படியே கொஞ்சம் அழுகின முட்டைகளை எடுத்துக் கொண்டு சூர்யாவின் அலுவலகத்துக்குப் போனார்கள்.இவர்கள் போன நேரம், சூர்யா அலுவலகத்தைப் பூட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil