»   »  என்னை யாரும் தொடலை

என்னை யாரும் தொடலை

Subscribe to Oneindia Tamil

பிறப்பு படத்திற்காக நந்திதா போட்ட கலகல கிளாமர் ஆட்டம் சமீபத்தில் பொள்ளாச்சிஅருகே சூலக்கல் என்ற இடத்தில் படு சூடாக படமாக்கப்பட்டது.

எஸ்.ஆர்.எம். இன்டர்னேஷனல் பிலிம்ஸ் சார்பில் பிரமீளா தயாரிக்கும் படம்தான்பிறப்பு. பிரபா என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி போடுபவர்கருவாச்சி கார்த்திகா.

தூத்துக்குடியில் சாத்துக்குடியாக வந்து நடிப்பையும், கிளாமரையும் ஒரே கப்பில்ஜூஸாக கலந்து கொடுத்தாரே, அதே கார்த்திகாதான்.

கருவாப்பையா பாட்டு மூலம் கவனிக்கப்பட்ட கார்த்திகா, பிறப்பு மூலம்கோலிவுட்டில் மறு பிறப்புக்காக களம் இறங்கியுள்ளார். ஹீரோவின் மாமன் மகளாகஇப்படத்தில் வருகிறார் கார்த்திகா.

இப்படத்திலும் நடிப்போடு, கிளாமரையும் சேர்த்துக் கொடுத்து ரசிகர்களை மயக்கஉள்ளாராம் கார்த்திகா.

கார்த்திகாவை ஒரு அளவுக்கு மேல் உரிக்க முடியாது என்பதால் அதற்காகவேதிமிறல் ஸ்பெஷலிஸ்ட்டான நந்திதாவை வைத்து ஒரு குத்துப் பாட்டை குமுறலாகஎடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே சூலக்கல் என்ற இடத்தில் திருவிழா செட் போட்டு அங்குவைத்து நந்திதாவை ஆட விட்டுள்ளனர். திருவிழா பாட்டென்றாலும் கூட, விடலைப்பசங்களை விதிர்க்க வைக்கும் வரிகளைப் போட்டு படமாக்கியுள்ளனர்.

பாட்டின் முதல் சில வரிகளைக் கேளுங்கள்;

கடலைன்னா கடலை
இது கரிசக் காட்டு கடலை
இந்த விடலை எதையும் விடலை (??)
என்னை யாரும் இன்னும் தொடலை!
இப்படிப் போகும் பாடலுக்குத்தான் நந்திதா கும் கும் ஆட்டம் ஆடினார். பாட்டுமுழுக்க கவர்ச்சி ரசம்தான். ரசிகர்கள் சாமி ஆடுவது சத்தியம் என்கிறது பட யூனிட்.

இதில் நந்திதா, கார்த்திகா தவிர மயூகா என்ற ஒரு சைட் ஹீரோயினும் அட்டகாசம் பண்ணுகிறார்.

பாலுமகேந்திராவின் புதல்வனும், சச்சின் பட இயக்குனருமான ஷங்கிதான்இப்படத்திற்கு கேமராமேன். பாலாவின் உதவியாளரான இளங்கோவன்தான்இப்படத்தை இயக்குகிறார்.

சூப்பர்ல!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil