»   »  கார்த்திகா-' பேக் டூ பெவிலியன்'!

கார்த்திகா-' பேக் டூ பெவிலியன்'!

Subscribe to Oneindia Tamil
Karthika
தூத்துக்குடி நாயகி கார்த்திகாவின் நேரம் சரியில்லையோ என்னவோ முன்னேற்றப் பாதையில் செல்வதற்குப் பதில் பின்னோக்கிப் போக ஆரம்பித்திருக்கிறது அவரது திரையுலகப் பயணம்.

தூத்துக்குடி படம் மூலம் அறிமுகமான கார்த்திகா, முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். அவரது நடிப்பை விட ஆட்டம் இடம் பெற்ற கருவாப்பையா பாட்டுதான் கார்த்திகாவை அடையாளம் காட்டியது.

இதையடுத்து பிறப்பு என்ற படத்திலும், பாண்டியராஜன் மகனுடன் ஒரு படத்திலும் நடித்தார் கார்த்திகா. பாலாவின் நான் கடவுள் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாலாவுக்குத் திருப்தி வராததால் அந்தப் பட வாய்ப்பை இழந்தார் கார்த்திகா.

இப்போது சேரனுடன் ஒரு நாயகியாக ராமன் தேடிய சீதை படத்தில் நடிக்கப் போகும் கார்த்திகா மறுபடியும் ஒரு புதுமுகம் ஒருவருடன் நடிக்க புதிய படம் ஒன்றில் புக் ஆகியுள்ளாராம்.

அலையோடு விளையாடு என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் மீனவர்களின் வாழ்க்கையை அலசும் படமாம்.

இப்படத்தில் கவிதா என்ற கேரக்டரில் நடிக்கிறார் கார்த்திகா. அவருக்கு ஜோடியாக வருபவர் புதுமுகம் விஜயன்.

இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய முகமும் இருக்கிறார். அவர் மீரா ஜாஸ்மினின் அக்கா, ஜெனி ஜாஸ்மின். இந்தப் படத்தின் மூலம் தமிழில் பிளாட்பாரம் தேடப் போகிறாராம் ஜெனி.

குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் வளரவுள்ள இந்தப் படத்தின் மூலமாவது தனக்கு நல்ல பிரேக் கிடைக்கட்டும் என்ற வேண்டுதலோடு நடித்துக் கொண்டிருக்கிறாராம் கார்த்திகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil