»   »  மெகா சீரியல் நடிகையானார் ’கண்ணழகி’ கார்த்திகா!

மெகா சீரியல் நடிகையானார் ’கண்ணழகி’ கார்த்திகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் வாரிசாக இருந்தாலும் சினிமாவில் திறமை இருந்தால் தான் மின்ன முடியும். திறமை இருந்தும் கூட ஓவராக ஆடியதால் காணாமல் போனவர்களும் உண்டு. திறமையும் இருந்து, அடக்கமாகவும் இருந்து சரியான படங்களை தேர்வு செய்யாமலேயே கேரியரைக் கெடுத்து கொண்ட வாரிசுகள் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் கார்த்திகா.

Karthika enters small screen

தமிழ், மலையாளத்தில் கொடிகட்டி பறந்த ராதாவின் வாரிசு தான். கார்த்திகா கே.வி.ஆனந்த்தின் கோ படத்தில் அறிமுகமானார். அந்த படத்திலேயே நல்ல பெயர் கிடைக்க அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் அதன்பின் நடித்தவை எல்லாம் தோல்வி படங்களாகவே வீட்டிலேயே முடங்க வேண்டியதாயிற்று.

கார்த்திகாவின் தங்கை துளசிக்கும் இதே நிலை தான். பாரதிராஜா, மணிரத்னம்படங்களில் நடித்தும் கூட தன் மகள்கள் வாய்ப்பில்லாமல் வீட்டிலேயேஇருக்கிறார்களே என்று மன உளைச்சலுக்கான ராதா இரண்டு மகள்களையும் வைத்துசொந்தப் படம் இயக்க முயற்சித்தார். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

இதனால் கார்த்திகாவை இந்தி மெகா சீரியலில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். இந்த மாத வெளியீடாக வெளிவரவிருக்கும் வா படத்தின் ரிசல்டை பொறுத்தே கார்த்திகாவுக்கு தொடர்ந்து படம் கிடைக்கும்.

English summary
Actress Karthika is entering to small screen and playing lead role in a mega serial

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil