»   »  வெள்ளித்திரையிலிருந்து 'சின்னத்திரை'க்கு தாவும் கார்த்திகா நாயர்?

வெள்ளித்திரையிலிருந்து 'சின்னத்திரை'க்கு தாவும் கார்த்திகா நாயர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை கார்த்திகா நாயர் விரைவில் இந்தி சீரியல்களில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் 'கோ' படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திகாவுக்கு அப்படம் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலுமே அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது.

கார்த்திகா நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'அன்னக்கொடி', 'புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை' ஆகிய படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை.

Karthika Makes her debut in Serial

தற்போது அருண் விஜய்யுடன் இவர் நடித்த 'வா டீல்' படம் மட்டுமே கைவசம் உள்ளது. வேறு புதிய படங்கள் எதிலும் கார்த்திகா ஒப்பந்தமாகவில்லை.

நடித்த படங்கள் தொடர்ந்து சொதப்புவதால் தென்னிந்திய மொழிகளில் இவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கைவசம் வேறு படங்களும் இல்லாததால், தற்போது இந்தி சீரியல்களில் கார்த்திகா நடிக்கப் போவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பாகுபலி', 'பஜ்ரங்கி பைஜான்' போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் தான் இப்படத்திற்கும் திரைக்கதை எழுதப்போவதாகக் கூறுகின்றனர்.

கார்த்திகாவின் அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா இருவரும் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தனர். ஆனால் கார்த்திகா மற்றும் அவரது தங்கை துளசி இருவராலும் அந்தளவுக்கு புகழ் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Actress Karthika Nair debut in Hindi Serial very soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos