»   »  விலகினார் கஸ்தூரி

விலகினார் கஸ்தூரி

Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் படத்தில் இளம் நடிகர் பிரபாஸின் அம்மா வேடத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட முன்னாள் நாயகி கஸ்தூரி இப்போது அப்படத்திலிருந்து விலகி விட்டாராம்.

ஒரு காலத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் கஸ்தூரி. 2ம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த கஸ்தூரி பின்னர் வாய்ப்பிழந்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்த் நடித்த காதல் கடிதம் படத்தில் கவர்ச்சி ராணியாக வந்து போனார்.அதன் பின்னர் ஏகப்பட்ட புது நடிகைகள் வந்து குவிந்ததால் நடிப்பிலிருந்து விலகி கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.

இப்போது மீண்டும் சென்னைப் பக்கம் வந்துள்ள கஸ்தூரி மறுபடியும் அரிதாரம் பூச ஆவலுடன் வாய்ப்பு தேடினார். அதில் கிடைத்தது தெலுங்குப் படமான முன்னா.

இதில் பிரகாஷ் ராஜின் மனைவியாக, இளம் நடிகர் பிரபாஸின் அம்மா வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வந்த வாய்ப்பை விட வேண்டாமே என ஏற்றுக் கொண்டார் கஸ்தூரி.

இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்து ஒரு ரவுண்டு அடித்து விட ஆர்வமாக இருந்தார் கஸ்தூரி. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் அறிகுறியே இல்லாததால் அப்செட் ஆனார் கஸ்தூரி.

பொறுத்துப் பார்த்த கஸ்தூரி இப்போது அப்படத்திலிருந்து விலகி விட்டாராம். தற்போது தமிழிலேயே வாய்ப்புகளைத் தேட முடிவு செய்து புது ஆல்பம் தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளாராம்.

இதுதவிர புது பி.ஆர்.ஓ. ஒருவரையும் நியமித்து புது வேகத்துடன் பட வாய்ப்புகளை அலச ஆரம்பித்துள்ளாராம்

அக்கா, அண்ணி என எந்த கேரக்டர் என்றாலும் கஸ்தூரிக்கு ஓ.கேவாம். ஆனால் இளம் நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டாராம்.

கஸ்தூரியை மறுபடியும் மணக்க வைக்கப் போவது யாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil