நாகினி பாம்பு காஸ்டியூமில் கலக்கும் மெட்ராஸ் பட ஹீரோயின்!
சென்னை : மெட்ராஸ், கதகளி, கணிதன் என தொடர் வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை கேத்தரின் தெரசா.
கடைசியாக விஜய் தேவர்கொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்போதைக்கு மலையாளம் மற்றும் தெலுங்கில் மட்டும் நடித்து வரும் கேத்தரின் தெரசா நாகினி பாம்பு போல வித்தியாசமான காஸ்டியூமில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

மெட்ராஸ்
வட சென்னையின் வாழ்க்கை முறையை தத்ரூபமாக காட்டிய மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேத்தரின் தெரசா அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்திருந்தார். மெட்ராஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கதகளி மற்றும் கணிதன் ஆகிய படங்களும் இவருக்கு வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

படுதோல்வி
தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த கேத்தரின்தெரசா விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. மேலும் ராசி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் இதில் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அர்ஜுன் ரெட்டி ரேஞ்சுக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

பிம்பிசாரா
ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாக பாலா தன்டானனா மற்றும் கல்யாண் ராம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பிம்பிசாரா ஆகிய படங்களில் தெலுங்கில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்திலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்போதைக்கு தமிழில் எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

கலக்கலான காஸ்டியூமில்
சோசியல் மீடியாக்களில் செம ஆக்டிவாக இருக்கும் கேத்தரின் அடிக்கடி தளதளன்னு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட இப்பொழுது நாகினி பாம்பு போல வித்தியாசமான காஸ்டியூமில் கலக்கலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











