»   »  ரன்பீருடனான காதல் முறிவிற்குப் பின்... சல்மான் குறித்து முதன்முறையாக மனந்திறந்த கத்ரீனா

ரன்பீருடனான காதல் முறிவிற்குப் பின்... சல்மான் குறித்து முதன்முறையாக மனந்திறந்த கத்ரீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரன்பீருடனான காதல் முறிவிற்குப் பின் முதன்முறையாக நடிகர் சல்மான் கானுக்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து நடிகை கத்ரீனா கைப் மனம் திறந்திருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைப்-ரன்பீர் கபூர் ஜோடி பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களின் காரணமாக இந்த இருவரின் காதலும் தற்போது முடிவிற்கு வந்திருக்கிறது.

கத்ரீனா கைப்- ரன்பீர் கபூர்

கத்ரீனா கைப்- ரன்பீர் கபூர்

பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் கத்ரீனா-ரன்பீர் காதல் முறிவு பற்றியதுதான். இந்த செய்தியைக் கேள்விப்படும் அனைவருமே என்னது அப்படியா? என்று ஆச்சரியப்படுகின்றனர். மிக நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது உண்மையாகவே பிரிந்து விட்ட செய்தி பாலிவுட்டில் பலருக்கும் வருத்தத்தை அளித்திருக்கிறது.

சிங்கிள் தான்

சிங்கிள் தான்

சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் முறிவு பற்றி கேட்டபோது "ஆமாம் நான் சிங்கிளாகத் தான் இருக்கிறேன். இந்த காதலர் தினத்தை தனியாகவே கொண்டாடப் போகிறேன்" என்று பதிலளித்து தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு கத்ரீனா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சல்மான் கான்

சல்மான் கான்

மேலும் முதன்முறையாக சல்மான் கானுடனான தனது உறவு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். "நானும் சல்மானும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். எந்த ஒரு உறவிலும் மரியாதையும், மதிப்பும் மிகவும் அவசியமாக இருக்கிறது. சல்மானுடனான உறவு குறித்து இதற்கு மேல் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை".

திருமணம்

திருமணம்

"எனது திருமணம் எப்போது நடக்கும் என்று நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. கடவுள் தீர்மானித்தபடி எனது திருமணம் நடைபெறும்" என்று திருமணம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கிறார். தற்போதைய நிலவரத்தின்படி ரன்பீருக்கு அவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Katrina has maintained silence and doesn't want to comment over the break-up rumours. But the Fitoor actress has something to say about her relationship with Salman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil