»   »  ரன்பிர்-தீபிகா இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து வயித்தெரிச்சலில் கத்ரீனா

ரன்பிர்-தீபிகா இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து வயித்தெரிச்சலில் கத்ரீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமாஷா படத்தில் ரன்பிர் கபூர், தீபிகா படுகோனே இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து நடிகை கத்ரீனா கைஃப் பொறாமையில் உள்ளார்.

ஒரு காலத்தில் தீபிகா படுகோனேவை காதலித்த ரன்பீர் கபூர் தற்போது நடிகை கத்ரீனா கைஃபின் காதலன் ஆவார். இந்நிலையில் ரன்பிரும், தீபிகாவும் சேர்ந்து தமாஷா என்ற படத்தில் நடித்துள்ளனர். படத்தில் அவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி அருமையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து கத்ரீனா கூறுகையில்,

கெமிஸ்ட்ரியா?

கெமிஸ்ட்ரியா?

இது உண்மை இல்லை என்று நான் நினைக்கிறேன். நானும், ரன்பிரும் சேர்ந்து நடித்த ரஜ்னீத்தி மற்றும் அஜப் பிரேம் கி கசப் கஹானி ஆகிய படங்கள் வெற்றி மட்டும் பெறவில்லை, ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. ரன்பிர், தீபிகா நடித்த ஏ ஜவானி ஹை தீவானி படம் அதன் பிறகு வந்ததால் அத்துடன் ஒப்பிடக் கூடாது.

தமாஷா

தமாஷா

தமாஷா ஒரு சிறந்த படம். அதில் ரன்பிர் சிறப்பாக நடித்துள்ளார். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். ஒரு படம் ஓடாவிட்டால் எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.

ஏக் தா டைகர்

ஏக் தா டைகர்

ஏக் தா டைகர் படத்தில் நானும், சல்மானும் ஜோடி சேர்ந்து நடித்தோம். முன்னாள் காதலர்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே போன்று தான் ஜவானி படத்திலும்.

சல்மான்

சல்மான்

நானும், சல்மானும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனால் கூடத் தான் அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். ஆனால் நிஜத்தில் எங்கள் வாழ்க்கை வேறு, வேறு வழியில் செல்கிறது என்றார் கத்ரீனா.

English summary
Katrina Kaif is reportedly jealous of the chemistry between her boyfriend Ranbir Kapoor and his ex-girlfriend Deepika Padukone in Tamasha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil