»   »  சென்னை வெள்ளத்தால் கவலையில் இருக்கும் நடிகை கத்ரீனா: காரணம் 'அம்மா'

சென்னை வெள்ளத்தால் கவலையில் இருக்கும் நடிகை கத்ரீனா: காரணம் 'அம்மா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்கு மிக அருகே தனது தாய் வசிப்பதால் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கவலை அடைந்துள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சென்னை வெள்ளத்தில் மிதப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில்,

Katrina Kaif is worried about Chennai floods

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களை நினைத்து வருத்தப்படுகிறேன். என் தாய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மிக அருகில் வசிக்கிறார். இன்று அங்கிருந்து ஒருவர் போன் செய்து பேசியதில் இருந்து கவலையாக உள்ளது.

இயற்கை சீற்றம் பற்றி எதுவும் செய்ய முடியாதது துரதிர்ஷ்டவசமானது. மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.

என் தாய் சென்னையில் வசித்தபோது நான் அங்கு வந்திருக்கிறேன். அது மகிழ்ச்சியான அனுபவம் என முன்பு கத்ரீனா தெரிவித்திருந்தார்.

English summary
Bollywood actress Katrina Kaif is worried about Chennai floods as her mother lives very close to the affected area.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil