»   »  நடிப்பிற்கு வயதா தடை? – 31 வயதிலும் 15 மணிநேரம் நடிக்கும் அழகு நடிகை கத்ரீனா கைப்!

நடிப்பிற்கு வயதா தடை? – 31 வயதிலும் 15 மணிநேரம் நடிக்கும் அழகு நடிகை கத்ரீனா கைப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் 31 வயதான அழகான கதாநாயகியான் கத்ரீனா கைப் ஒருநாளைக்கு 15 மணி நேரம் நடிப்பிற்காகவே செலவழிக்கின்றாராம்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர். இந்தி மொழியை உச்சரிக்கத் தெரியாதவர் என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டவர் நடிகை கத்ரீனா கைப்.

ஆனால் அவரோ எல்லா தடைகளையும் தாண்டி பாலிவுட்டில் பத்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிட்டார்.

சினிமா உலகின் உண்மை முகம்:

சினிமா உலகின் உண்மை முகம்:

முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி நல்ல பெயர் வாங்கிவிட்டார். இவர் முதலில் வெளியே இருந்து பார்த்தபோது, இவருக்கு சினிமா உலகம் ஒரு ஜிகினா உலகமாகத்தான் தெரிந்திருக்கிறது. உள்ளே வந்த பின்புதான் அதன் உண்மைகள் புரிந்திருக்கிறது.

 தொடர்ச்சியான நடிப்பு:

தொடர்ச்சியான நடிப்பு:

திரையுலகில் பணியாற்றுவது ரொம்பவே கடினம். சிலநேரங்களில் தொடர்ந்து 14, 15 மணி நேரம் நடிக்க வேண்டியதிருக்கிறது. இது சாதாரண விஷயமல்ல. அவ்வப்போது சரியான நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது.

தீவிரமான ஆர்வம் அவசியம்:

தீவிரமான ஆர்வம் அவசியம்:

அதெல்லாம் நமது உடம்பைப் பாதிக்கும். திரையுலகில் நீடிப்பதற்கு தீவிரமாக ஆர்வம் தேவை. அத்தகைய ஆர்வம் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம்தான் நம்மால் இங்கு தாக்குப் பிடிக்க முடியும் என்கிறார் கத்ரீனா.

வயது ஒரு தடையில்லை:

வயது ஒரு தடையில்லை:

தற்போது "ஜக்ஜகா ஜஸுஸ்", "பிட்டூர்" ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் கத்ரீனா 31 வயதை எட்டியிருக்கிறார். ஆனால் நடிப்புக்கு வயது தடையில்லை என்பது கத்ரீனாவின் கருத்து.

உதாரண கதாநாயகிகள்:

உதாரண கதாநாயகிகள்:

அதற்கு அம்மாவான பிறகு திரையுலகுக்குத் திரும்பி வந்த ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோரை உதாரணமாகக் காட்டுகிறார் கத்ரீனா. இங்கே வயது ஒருவரின் சினிமா விதியை நிர்ணயிப்பதில்லை என்கிறார் இவர்.

நல்ல படம்தான் தேவை:

நல்ல படம்தான் தேவை:

இந்தி திரையுலகில் ஆட்சி செலுத்தும் மூன்று கான்களுடனும் நடித்தவர் கத்ரீனா. ஆனால் தற்போது, யாரோடு சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்பதை விட, நல்ல படமா என்றுதான் பார்க்கிறாராம்.

வலுவான கதாப்பாத்திரங்கள்:

வலுவான கதாப்பாத்திரங்கள்:

‘‘சல்மான், ஷாருக்குடன் நான் இணைந்து நடித்தஏக் தா டைகர், ஜப் தக் ஹே ஜான் படங்களிலும் எனக்கு வலுவான கதாபாத்திரங்கள்தான். அந்தப் பாத்திரங்களில் நடிக்க எந்த நடிகையும் விரும்புவார்.

நடிப்பதில் மகிழ்ச்சி எனக்கு:

நடிப்பதில் மகிழ்ச்சி எனக்கு:

ஆனால், நாம் யாருடன் இணைந்து நடிக்கிறோம் என்பது விஷயமே அல்ல. ஆனால் நான் எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி'' என்று புன்னகைக்கிறார் அவர்.

English summary
She battled Hindi diction woes and the 'outsider' tag to win over Bollywood audiences and has worked with top-notch stars and filmmakers in her over decade-long acting career. Model-turned-actress Katrina Kaif says the industry only has space for those who are passionate about their craft - age notwitstanding.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil