»   »  ரன்பிர் காதலி என்று அழைத்தால் என் ரத்தம் கொதிக்கிறது: நடிகை கத்ரீனா கைஃப்

ரன்பிர் காதலி என்று அழைத்தால் என் ரத்தம் கொதிக்கிறது: நடிகை கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் காதலி தானே அவர் என்று யாராவது கூறினால் நடிகை கத்ரீனா கைஃபின் ரத்தம் கொதிக்கிறதாம்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தீபிகா படுகோனைவை பிரிந்த பிறகு நடிகை கத்ரீனா கைஃபை காதலித்து வருகிறார். இந்நிலையில் ரன்பிரும், தீபிகாவும் சேர்ந்து தமாஷா படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை பற்றி பிறர் புகழ்ந்து பேசுவது கத்ரீனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்நிலையில் ரன்பிர் கபூர் பற்றி எந்த கேள்வி கேட்டாலும் கத்ரீனா பதில் அளிப்பது இல்லை.

ரன்பிர்

ரன்பிர்

நான் ரன்பிர் கபூர் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. ரன்பிர் கபூரின் காதலி என்று என்னை அடையாளம் காண்பது எனக்கு பிடிக்கவில்லை என்கிறார் கத்ரீனா.

ரத்தம்

ரத்தம்

யாராவது என்னை ரன்பிர் கபூர் காதலி என்றால் அதை கேட்டு என் ரத்தம் கொதிக்கிறது. எனக்கு என்று ஒரு அடையாளம் உள்ளது. அப்படி இருக்கையில் என் தனிப்பட்ட அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்று கத்ரீனா கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்ட்டி

பார்ட்டி

அண்மையில் ரன்பிர் கபூர் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தார். கத்ரீனாவோ அதை பார்க்காமல் அவரது தோழிகளுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டார்.

பிரச்சனை

பிரச்சனை

அண்மை காலமாக கத்ரீனாவுக்கும், ரன்பிருக்கும் எதற்கெடுத்தாலும் சண்டை வருகிறதாம். பட வேலைகள் துவங்கி தனிப்பட்ட விஷயம் வரை சண்டையாக இருக்கிறதாம்.

English summary
Katrina Kaif said that she doesn't like to get referred as Ranbir Kapoor's girlfriend and her blood boils whenever she is referred like that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil