»   »  பேசுங்க பேசுங்க நல்லா பேசுங்க, இதுக்கு எல்லாம் நான் அசர மாட்டேன்: கத்ரீனா கைஃப்

பேசுங்க பேசுங்க நல்லா பேசுங்க, இதுக்கு எல்லாம் நான் அசர மாட்டேன்: கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரன்பிர் கபூருடனான காதல் முறிவு குறித்து மக்கள் ஆளாளுக்கு யூகித்து பேசுவதால் தனக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைஃபும் காதலித்து வந்தனர். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் ஒரு வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில் ரன்பிருக்கும் அவரது முன்னாள் காதலி தீபிகா படுகோனேவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது கத்ரீனாவுக்கு பிடிக்கவில்லை.

காதல் முறிவு

காதல் முறிவு

ரன்பிரும், தீபிகாவும் ஓவர் நெருக்கம் காட்டியது பிடிக்காமல் சூசகமாக பேசி வந்தார் கத்ரீனா. இந்நிலையில் ரன்பிரும், கத்ரீனாவும் பிரிந்துவிட்டனர். ரன்பிர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார்.

அப்படியா?

அப்படியா?

கத்ரீனா தற்போது எங்கு சென்றாலும் அவரின் படங்களை பற்றி பேசாமல் அவரது சொந்த வாழ்க்கை பற்றி தான் கேட்கிறார்கள். அவரிடம் கேட்பதோடு மட்டும் அல்லாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மக்கள் அவர்களாகவே எதையாவது யூகித்து கூறுகிறார்கள்.

கத்ரீனா

கத்ரீனா

தன் படங்களை விட தனது சொந்த வாழ்க்கை பற்றி மக்கள் ஏதோ ஏதோ பேசுவது பற்றி கத்ரீனா கவலைப்படவில்லை. ரன்பிரை பிரிந்த பிறகு இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரிந்தும் அவர் பல்வேறு இடங்களுக்கு கவலையில்லாமல் சென்று வருகிறார்.

எனக்கு மட்டும் அல்ல

எனக்கு மட்டும் அல்ல

படங்களை பற்றி அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பலரும் பலவாறு பேசுவது எனக்கு மட்டும் அல்ல பல பிரபலங்களுக்கு நடக்கிறது என்று கத்ரீனா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Katrina Kaif is unperturbed by speculation around her break-up with actor Ranbir Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil