»   »  எவ்வளவு மீம்ஸ் போடுவீங்கன்னு பார்க்கிறேன்: ஃபேஸ்புக்கிற்கு திரும்பிய காவ்யா மாதவன்

எவ்வளவு மீம்ஸ் போடுவீங்கன்னு பார்க்கிறேன்: ஃபேஸ்புக்கிற்கு திரும்பிய காவ்யா மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: திலீப் கைதானதையடுத்து ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய நடிகை காவ்யா மாதவன் தற்போது மீண்டும் வந்துள்ளார்.

நடிகை பாவனாவை கடத்தி, மானபங்கப்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் கைதான பிறகு அவரின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவன் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினார்.

திலீப், காவ்யாவை கலாய்த்து பலரும் மீம்ஸ் போட்டது, திட்டியது ஆகியவற்றை பார்த்து கடுப்பாகி ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினார் காவ்யா.

 தலைமறைவு

தலைமறைவு

காவ்யா தலைமறைவாகிவிட்டார் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியது அதை உறுதி செய்வது போன்று இருந்தது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

காவ்யா ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இரண்டு நாட்களிலேயே மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்துவிட்டார். மீம்ஸ் போட்டால் என்ன, திட்டினால் என்ன பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டாராம்.

போலீஸ்

போலீஸ்

பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி காவ்யா மாதவனின் கடைக்கு இரண்டு முறை சென்றதற்கான ஆதாரம் போலீசாரிடம் கிடைத்துள்ளது.

விசாரணை

விசாரணை

பாவனா வழக்கு தொடர்பாக காவ்யா மாதவன் மற்றும் அவரது அம்மாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் போலீசார். காவ்யாவுக்கும் பாவனாவுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Dileep's wife Kavya Madhavan is back on facebook just two days after deactivating it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil