»   »  அனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா?

அனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அனுஷ்காவுக்கும், நயன்தாராவுக்கும் கிடைக்காத பெருமை காவ்யா மாதவனுக்கு... எதில் தெரியுமா?- வீடியோ

சென்னை : தேடுபொறி தளமான யாஹூ வெளியிட்ட இந்த 2017-க்கான இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளின் பத்து பேர் கொண்ட பட்டியலில் காவ்யா மாதவனுக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது. அந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்திய நடிகையும் அவர் மட்டும் தான்.

தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும் அனுஷ்காவுக்கும் கிடைக்காத ஒரு இடம், பெருமை, சமீபகாலமாக அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கிடைத்துள்ளது.

Kavya madhavan got place in most searched actress list

கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை கடத்தல் வழக்கில், தனது கணவர் திலீப்புடன் சேர்ந்து அதிகமாக செய்திகளில் அடிபட்டவர் என்கிற வகையில் அதிகம் பேரால் காவ்யா மாதவன் இணையதளத்தில் தேடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மூன்று இடங்களில் சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் உள்ளனர். கடந்த வருடமும், அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் வகித்தார். 'கபாலி' படத்தில் நடித்த ராதிகா ஆப்தே எட்டாவது இடம் பிடித்திருந்தார்.

English summary
Kavya Madhavan is ranked 9th on the list of the most searched Indian actresses on the website Yahoo of the year 2017. She is the only South Indian actress in this list. The first three places are Sunny Leone, Priyanka Chopra and Aishwarya Rai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil