»   »  திலீப் மனைவியாக இருப்பதே போதும்... நடிப்புக்கு குட் பை! - காவ்யா மாதவன்

திலீப் மனைவியாக இருப்பதே போதும்... நடிப்புக்கு குட் பை! - காவ்யா மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை காவ்யா மாதவன் சினிமாவிலிருந்து முழுமையாக ஒதுங்குவதாக, சமீபத்தில் திலீப்பை மணந்த நடிகை காவ்யா மாதவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலீப் முதலில் மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகள் கழித்துப் பிரிந்தார். அண்மையில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

Kavya Madhavan says good bye to acting career

இரண்டாவதாக காவ்யா மாதவனை திலீப் மணந்தார். சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது. அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க காவ்யா மாதவன் ஒப்புக் கொள்ளவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதை அவர் தவிர்த்து வருகிறார்.

முதல் கணவரான நிஷால் சந்திராவை திருமணம் செய்ய இருந்த போதும் காவ்யா மாதவன் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்றார். அதற்கேற்ப நடிக்காமல் கணவருடன் வெளிநாட்டில் வசித்தார். இப்போது திலீப்பை மணந்த பிறகு மீண்டும் நடிப்புக்கு முழுக்குப் போட்டுள்ளார்.

'திலீப்பின் மனைவியாக இருப்பதே போதும்... நடிப்புக்கு இத்துடன் முழுக்குப் போடுகிறேன்,' என்று காவ்யா மாதவன் கூறினார்.

English summary
Actress Kavya Madhavan has said good bye to acting career after her marriage with Dhileep.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil