»   »  'மாடாம்பி' காவ்யா!

'மாடாம்பி' காவ்யா!

Subscribe to Oneindia Tamil
Kavya Madhavan

மாடாம்பி என்கிற புதிய மலையாளப் படத்தில் காவ்யா மாதவன் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ஜோடி சேருகிறார்.

மலையாளத்தில் சூப்பர் பிசியாக இருப்பவர் காவ்யா மாதவன். தமிழிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

2ம் நிலை நடிகர்களுடன் ஜோடி சேருவதையே காவ்யா அதிகம் விரும்புவார். காரணம், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் அவர்கள்தான் பெரிதாக தெரிவார்கள், நம்மால் ஷைன் பண்ண முடியாதே என்பதால்.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக மோகன்லாலுடன் ஜோடி சேருகிறார் காவ்யா. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படம் இது. படத்திற்குப் பெயர் மாடாம்பி.

தனியார் நிதி நிறுவன ஓனராக (அதாவது வட்டிக்கு விடுபவராக) இப்படத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். மத்திய கேரளாவில் பேசும் மலையாளத்தைப் போல இப்படத்தில் பேசி நடிக்கப் போகிறாராம் மோகன்லால்.

ஜெயலட்சுமி என்கிற தனியார் வங்கியில் பணியாற்றும் ஊழியையாக இப்படத்தில் நடிக்கிறார் காவ்யா. இந்த வங்கி மோகன்லால் வட்டிக்கு விட்டுப் பிழைத்து வரும் ஊரில் கிளையைத் தொடங்குகிறது. அதன் பிறகு ஏற்படும் கலாட்டாக்களை காமெடி கலந்து கொடுக்கிறார்களாம்.

ஒருகாலத்தில் காவ்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜெயசூர்யா, இப்படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். அவருடன் ஜெகதி, சீனிவாசன், சித்திக் ஆகியோரும் இருக்கிறார்கள்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil