»   »  டிவி தொகுப்பாளினி காவ்யா

டிவி தொகுப்பாளினி காவ்யா

Subscribe to Oneindia Tamil


2 வருட இடைவெளிக்குப் பின்னர் தமிழுக்கு வந்துள்ள காவ்யா, சாது மிரண்டால் படத்தில் டிவி தொகுப்பாளினியாக வருகிறாராம்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து தேறாமல் போன சொற்ப நடிகைகளில் காவ்யாவும் ஒருவர். தமிழை விட மலையாளத்துக்கே இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததும், இவர் தமிழில் பெரிய லெவலுக்கு வராமல் போனதற்கு முக்கியக் காரணம். அதை விட முக்கியமாக மலையாள இயக்குநர்கள் தமிழில் படம் இயக்கினால் மட்டுமே அதில் காவ்யா நடிப்பார்.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காவ்யா தமிழுக்கு வருகிறார். இம்முறை அவர் நடிக்கப் போவது சாது மிரண்டால். இப்படத்தை இயக்கப் போவது மலையாள இயக்குநர் சித்திக். பிரசன்னாதான் நாயகன்.

சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இப்படத்தில் டிவி தொகுப்பாளினியாக நடிக்கிறாராம் காவ்யா. அப்பாவித்தனமான (அதாவது கொழந்தைத்தனமான) ரோலில் பிரசன்னா நடிக்கிறார்.

இந்த முறை தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்து விடும் எண்ணத்தில் இருக்கிறாராம் காவ்யா. இதற்காக பெருத்துப் போன தனது உடம்பு எடையைக் குறைத்துள்ளாராம். கிட்டத்தட்ட 6 கிலோ வரை குறைத்துள்ளாராம். பார்க்க ஸ்லிம்மாகவும், கூடுதல் அழகோடும் உள்ளார்.

கேரக்டருக்கு உயிர் கொடுப்பதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்கிறாராம். ஹேர் ஸ்டைல், பேச்சு ஸ்டைல் என எல்லாவற்றிலும் நிறைய கவனம் செலுத்துகிறாராம்.

தனது புதிய படம் குறித்து காவ்யா கூறுகையில், தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுப்பதற்கு நல்ல கதையாக கிடைக்க வேண்டும் என காத்திருந்தேன். அந்த நேரத்தில்தான் இந்தப் படம் வந்தது. இதற்காக நான் சித்திக்குக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் எனக்கு நல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சித்திக்கும் தன் பங்குக்கு காவ்யாவை தாலாட்டினார், அதாவது பாராட்டினார். அவர் கூறுகையில், சாது மிரண்டால், காவ்யாவுக்கு ஏற்ற படம். தமிழில் இது அவருக்கு நிலையான இடத்தைக் கொடுக்கும். ஒட்டுமொத்த யூனிட்டும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

மலையாளத்திலும் இப்படத்தை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார் சித்திக்.

Read more about: chennai, kavya, sadhumirandaal
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil