சிம்பு, தனுஷ் படம் மிஸ் ஆனா என்னம்மா.. நான் இருக்கேன்.. கயாடு லோஹருக்கு வாய்ப்பு கொடுத்த விஷால்!
சென்னை: அசாமை சேர்ந்த கயாடு லோஹர் மலையாளத்தில் வெளியான பத்தொன்பதான் நூற்றாண்டு படத்தில் நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். பெண்கள் மார்பை மறைத்தால் வரி செலுத்த வேண்டும் என கொடுமையான சட்டம் இருந்த நிலையில், அதனை எதிர்த்து தனது மார்பகங்களையே அறுத்து இதோ வரி எடுத்துக்கோ என போராடி உயிர்த் தியாகம் செய்த நங்கேலி கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடிக்க பல இயக்குநர்களின் பார்வைகளும் அவர்மீது பட்டன.
தமிழில் இந்த ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் கயாடு லோஹர் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே அவர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்த இதயம் முரளி படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.

ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து இம்மார்ட்டல்ஸ் எனும் படத்தில் நடித்து வரும் கயாடு லோஹர் சிம்புவின் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால், பார்க்கிங் பட இயக்குநர் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் பூஜை போட்டதுடன் நிறுத்தப்பட்ட நிலையில், கயாடு லோஹருக்கு அந்த பட வாய்ப்பு மிஸ் ஆனது.
சிம்பு, தனுஷ் படங்கள் மிஸ்: சிம்புவை தொடர்ந்து தனுஷின் ஒரு படத்திலும் கயாடு லோஹர் கமிட்டானதாகவும் ஆனால், சில காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆகாஷ் பாஸ்கரன் வீடுகளில் நடந்த அதிரடி அமலாக்கத்துறை சோதனைகளை தொடர்ந்து கயாடு லோஹர் மீது கிளம்பிய சில கிசுகிசுக்கள் தான் அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குறைய காரணமாக அமைந்தன. மீண்டும் மலையாளத்தில் டொவினோ தாமஸ் படத்தில் நடிக்க சென்ற கயாடு லோஹர் நேற்று மீண்டும் சென்னை திரும்பியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
நகைக்கடை திறப்பு விழா: பொதுவாகவே நகைக்கடை திறப்பு விழாக்களில் பல நடிகைகள் பங்கேற்பது வழக்கம். நேற்று தி நகரில் புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற கயாடு லோஹரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதாக கூறியுள்ளார் கயாடு லோஹர்.

விஷாலுக்கு ஜோடி: மீண்டும் தமிழ் சினிமாவில் கயாடு லோஹர் நடிப்பாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் கிளம்பி வந்த நிலையில், சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தில் கயாடு லோஹர் தான் ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த படத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். விஷாலுக்கு இன்னொரு ஹீரோயினாக தன்ஷிகா நடிப்பாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மத கஜ ராஜா வெற்றி: இந்த ஆண்டு சுந்த. சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் தாமதமாக ரிலீஸ் ஆன நிலையிலும், சுமார் 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி பொங்கல் வின்னராக மாறிய போதே மீண்டும் விஷால் உடன் சுந்தர். சி படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மூக்குத்தி அம்மன் 2 படத்தை முடித்து விட்டு விஷால் படத்தை சுந்தர். சி இயக்கப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











