»   »  ரெஜினாவுக்காக தெலுங்கு பேசும் கேடி பில்லா கில்லாடி ரங்கா

ரெஜினாவுக்காக தெலுங்கு பேசும் கேடி பில்லா கில்லாடி ரங்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப்படங்கள் தமிழில் டப் ஆவது பெரிய விசயமில்லை. ஆனால் தமிழில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆக கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் தெலுங்கு பேசப் போகிறது. சிவகார்த்திக்கேயன் விமல் நடித்த இந்த படத்தின் நாயகிகளாக பிந்து மாதவி, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். ரெஜினா தற்போது தெலுங்கில் பிஸியான நடிகையாகிவிட்டதால் அவருக்காகவே படத்தை டப்பிங் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் பிரபல கல்லூரியில் படித்த ரெஜினா, முதலில் மாடலிங், குறும்படம், என நடித்து ‘கண்ட நாள் முதல்' படத்தில், லைலாவின் தங்கையாக சினிமாவிற்குள் நுழைந்தார். ‘அழகிய அசுரா'வில் ஹீரோயினாக நடித்த அவரை அடையாளம் காட்டியது கேடி பில்லா கில்லாடி ரங்கா படம்தான்.

தெலுங்கு பட உலகில்

தெலுங்கு பட உலகில்

‘சிவா மனசுலோ ஸ்ருதி' மூலம் தெலுங்கு திரை உலகில் நுழைந்த ரெஜினா ‘ரொட்டீன் லவ் ஸ்டோரி'. கன்னடத்தில் ‘சூரியகாந்தி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமனார்.

முத்துப்புகழ் ரெஜினா

முத்துப்புகழ் ரெஜினா

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்காவிற்கு பிறகு அவரு வேறு படங்கள் சரியாக அமையவில்லை. ஆனால் ரெஜினா, தெலுங்கில் "கொத்த ஜன்டா, ரா ரா கிருஷ்ணய்யா, பவர்" ஆகிய படங்களில் நடித்து பரபரப்பாக பேசப்படும் நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அதிலும் 'பவர்' படத்தில் நடிகர் ரவிதேஜாவுக்குக் கொடுத்த முத்தத்தால் மேலும் அதிகமாக பேசப்பட்டார்.

முத்தத்தில் சாதனை

முத்தத்தில் சாதனை

சாய் தரம் தேஜா நாயகனாக நடித்த 'பில்ல நூவ்வு லேனி ஜீவிதம்' என்ற படத்தில் நாயகியாக நடித்த படத்திலும் நாயகன் சாயுடன் ஒரு முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ரெஜினா.

கேடி பில்லா கில்லாடி ரங்கா டப்பிங்

கேடி பில்லா கில்லாடி ரங்கா டப்பிங்

தெலுங்கில் ரெஜினா பெற்றுள்ள பிரபலத்துக்காகவே அவர் நடித்த தமிழ் படமான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் தெலுங்கில் டப்பிங் ஆகிறது. ரெஜினா மூலம் சிவகார்த்திக்கேயனும், விமலும் தெலுங்கு மொழி பேசப்போகிறார். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    English summary
    Regina Starrer Kedi Billa Killadi Ranga was one of the successful movies of Kollywood from the year 2013. Now, this comedy entertainer is being dubbed into Telugu. The dubbing rights of the movie have been bought by Thummalapalli Rama Satyanarayana under Bhimavaram Talkies. Vimal, Sivakarthikeyan, Bindu Madhavi and Regina Cassandra are the lead actresses in Kedi Billa Killadi Ranga which was directed by Pandiraj.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more