»   »  அக்ஷரா ஹாஸன் அல்ல பார்த்திபன் மகள் தான் பிடிவாதக்காரி

அக்ஷரா ஹாஸன் அல்ல பார்த்திபன் மகள் தான் பிடிவாதக்காரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனின் இளைய மகள் அல்ல நடிகர் பார்த்திபனின் மகள் தான் பிடிவாத்தக்காரப் பெண்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி தாய், தந்தை வழியில் நடிப்பை தேர்வு செய்துவிட்டார். நடிப்புக்கு இடையே அவர் பாடல்களும் பாடி வருகிறார்.

கமலின் இளைய மகள் அக்ஷரா நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது.

அக்ஷரா ஹாஸன்

அக்ஷரா ஹாஸன்

அக்ஷரா ஹாஸனுக்கு ஹீரோயினாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. இயக்குனர் மணிரத்னம் கூட தனது படத்தில் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க முயன்று தோல்வி அடைந்தார்.

இயக்கம்

இயக்கம்

எனக்கு கேமராவுக்கு முன்பு அல்ல கேமராவுக்கு பின்னால் நிற்கவே பிடிக்கும் அதாவது படத்தை இயக்கத் தான் பிடிக்கும் என்று கூறி நடிக்க வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழித்து வந்தார் அக்ஷரா.

தனுஷ்

தனுஷ்

கேமராவுக்கு முன்னால் வந்து நிற்க மாட்டேன் என அடம்பிடித்த அக்ஷரா தனுஷ் நடித்த இந்தி படமான ஷமிதாபில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் பிறகு தற்போது தல 57 படத்திலும் அவர் நடித்து வருகிறார். இயக்குனர் ஆகும் ஆசை இருந்தாலும் நடிப்பில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார் அக்ஷரா.

கீர்த்தனா

கீர்த்தனா

பார்த்திபனின் மகளான கீர்த்தனாவுக்கும் ஹீரோயினாக நடிக்க அதுவும் மணிரத்னம் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை ஏற்கவில்லை. அவருக்கு மணிரத்னமாக ஆசை. அதாவது இயக்குனர் ஆக வேண்டும்.

பிடிவாதம்

பிடிவாதம்

அக்ஷரா ஹீரோயினாக நடிக்க முன்பு மறுத்தபோது அவரா அவர் சரியான பிடிவாதக்காரப் பெண் என்றார்கள். ஆனால் கீர்த்தனா பற்றி தெரிய வந்த பிறகு கீர்த்தனா தான் அக்ஷராவை விட பிடிவாதக்காரப் பெண் என்கிறார்கள்.

நல்லது

நல்லது

பிடிவாதம் பிடித்தாலும் கீர்த்தனா தன் முடிவில் தெளிவாக இருக்கிறார். தன் மனதிற்கு விருப்பமான இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அக்ஷரா நடிக்க வந்தாலும் நிச்சயம் படங்களை இயக்க திரும்பி செல்வார். சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்.

English summary
It is not Akshara Haasan but Keerthana who is stubborn in her career choice. She is very clear about her carrer.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil