»   »  ஜிம்மில் சிக்கிய கீர்த்தி!

ஜிம்மில் சிக்கிய கீர்த்தி!

Subscribe to Oneindia Tamil

படு வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் நடிகையானவராம் கீர்த்தி சாவ்லா.

தமிழில் இந்த நிமிஷத்தில் கை நிறையப் படங்களுடன் படு பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சாவ்லா மட்டுமே. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறதாம் கீர்த்தியிடம்.

பாட்னா தந்த பேட்டியான கீர்த்திக்கு தாய்மொழி இந்தி என்றாலும் கூட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளும் நன்றாக தெரியுமாம். அதிலும் தமிழில் எழுதப் படிக்கவும் இப்போது கற்றுக் கொண்டு விட்டாராம்.

ஆழ்வார், ஆணை படத்தில் நடிக்கும்போது தமிழில் வசனங்களைப் பேச தடுமாறினாராம். அப்போது கூட நடித்தவர்கள், சீக்கிரம் தமிழ் கற்றுக் கொண்டால் வேகமாக முன்னேறி விடலாம் என்று அட்வைஸ் செய்தார்களாம்.

இதையடுத்து ஒரு டீச்சரம்மாவை வைத்துக் கொண்டு தீவிரமாக தமிழ் கற்க ஆரம்பித்த கீர்த்தி, இப்போது தமிழில் நன்கு தேறி விட்டாராம். இப்போதெல்லாம் தமிழ் வசனங்களைப் பேசுவதில் எந்த சிரமமும் இல்லையாம்.

எப்படி நடிகை ஆனீங்க கீர்த்தி என்று கேட்டால்,

அது ஒரு சுவாரஸ்யமான கதை என்று ஆரம்பித்த கீர்த்தி, நான் நடிப்பதில் சிறு வயதிலிருந்தே அதிக ஆர்வத்துடன் இருந்தேன். பிளஸ்டூ முடித்து விட்டு நடிப்புப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து அதையும் முடித்து விட்டேன்.

ஒரு நாள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு தயாரிப்பு நிர்வாகி என்னை அணுகினார். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது, நடிக்க ரெடியா என்றார்.

அதைக் கேட்டு பூரித்துப் போனேன். அப்படிதான் எனக்கு ஆணை படம் கிடைத்தது. அதன் பிறகு எனது மார்க்கெட் வேகமாக சூடுபிடித்து இப்போது பிசியான நடிகையாக மாறியுள்ளேன்.

ஓவர் கிளாமரா நடிக்கறீங்களே என்று கேட்டால், அப்படியெல்லாம் நான் நடிக்கவில்லை, நடிக்கவும் மாட்டேன். அந்தக் கதைக்குத் தேவையானதாக இருந்தால் கிளாமராக நடிப்பேன். முத்தக் காட்சியிலும் நடிப்பேன். எல்லாம் ரீசனபிளாக இருக்க வேண்டும். கிளாமரை திணிப்பது போலத் தெரிந்தால் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றார் தெளிவாக.

தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடத்திலும் பிசியாகியிருக்கிறார் கீர்த்தி சாவ்லா. தெலுங்கில் அவர் ஸ்ரீமன்னுடன் இணைந்து நடித்த ஒரு படம் என் பொண்டாட்டி எனக்கே சொந்தம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறதாம். அதில் படம் முழுக்க கிளாமரில் பின்னி எடுத்திருக்கிறாராம் கீர்த்தி.

சரியான கிளாமர் சாவ்லாவாக இருப்பார் போலிருக்கே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil