கீர்த்தி சுரேஷ் செய்த வேலையால் அசந்துபோய்க் கிடக்கும் ரசிகர்கள்!
Recommended Video

சென்னை : நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் 'மகாநதி'. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்தப் படம் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியாகிறது.
சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா பத்திரிக்கை நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடிக்க, பிரகாஷ்ராஜ் ஒரு கதாசிரியராக நடிக்கிறார். நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் சாவித்ரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம்.

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் வந்த வேகத்திலேயே ரசிகர்களின் அன்பை வெகுவாகச் சம்பாதித்து விட்டார். அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் அவரின் சில புகைப்படங்களையும், ரியாக்ஷன்களையும் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

மகாநதி ஷூட்டிங்
'மகாநதி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்த கீர்த்தி சுரேஷ், அதன்பிறகு வேறு சில படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் மகாநதி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

சாவித்ரி பற்றி
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு சாவித்ரி பற்றிய பல அரிய தகவல்களை அவருடன் பணியாற்றிய சீனியர் கலைஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாராம் கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரி எப்போதும் தன் படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு தங்கக் காசுகளை அன்பளிப்பாக கொடுத்த விஷயத்தையும் தெரிந்து கொண்டாராம்.

தங்கக்காசு பரிசளித்த கீர்த்தி
தான் நடித்த ஒரு பழைய படத்தின் படப்பிடிப்பின்போது அந்த செட்டில் பணியாற்றிய அனைவருக்கும் சாவித்ரி தங்க நாணயம் பரிசளித்ததை அறிந்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் மகாநதி படப்பிடிப்பு குழுவினருக்கு தங்க நாணயங்களை பரிசளித்துள்ளார்.

மனதார வாழ்த்திய படக்குழு
படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தாலும், தற்போது சாவித்ரியின் குணத்தை உண்மையாகவே நிஜ வாழ்க்கையிலும் செய்துகாட்டியிருப்பதால் பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷை மனதார வாழ்த்தியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அசந்துபோயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











