»   »  அதிர்ஷ்ட தேவதை கீர்த்தி சுரேஷ்... இந்தாங்க... அவரைப் பற்றிய சில குறிப்புகள்! #KeerthiSuresh

அதிர்ஷ்ட தேவதை கீர்த்தி சுரேஷ்... இந்தாங்க... அவரைப் பற்றிய சில குறிப்புகள்! #KeerthiSuresh

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினான கீர்த்தி சுரேஷுக்கு இன்று 23 வது பிறந்தநாள். விஜய்யை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் டிட் பிட்ஸ்...

* கோலிவுட்டில் சில நடிகைகள் தான் ஒருசில படங்களிலேயே டாப் லெவலுக்கு சென்று விடுவார்கள். அதில் இப்போது இடம் பெற்றிருப்பவர் நடிகை கீர்த்தி. இவரது அம்மாவும் நடிகை தான். ஆம், சூப்பர்ஸ்டார் ரஜினியின் கிளாஸ் படமான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகள்தான் கீர்த்தி.

Keerthi Suresh Tidbits

* பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி எனும் படத்தின் மூலமாக கீர்த்தி அறிமுகமானார். ப்ரியதர்ஷன் இயக்கிய முதல் படத்தை தயாரித்தவர் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் தான்.

* கீர்த்தி நடித்த முதல் படத்தின் நடிகர் (மோகன்லால்), இயக்குநர் (ப்ரியதர்ஷன்) இருவருமே கீர்த்தி எங்களது மகள் போன்றவர் என ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். காரணம் இவர்கள் இருவருக்குமே கீர்த்தியின் தந்தை சுரேஷ் மிகவும் நெருக்கமான நண்பர்.

* குழந்தை பருவத்தில் கீர்த்தி சுரேஷ் சுட்டியான, ஆக்டிவான மாணவியாக இருந்தார். கீர்த்தி ஒரு நீச்சல் சாம்பியனும் கூட...

* தனது எட்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிவிட்டார். 'குபேரன்', 'அச்சனேயானு எனக்கி இஷ்டம்' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும், கீர்த்தி கிருஷ்ணாகிருபா, சந்தான கோபாலம் போன்ற டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

* நடிப்பை விட ஃபேஷனில் கீர்த்திக்கு அதிக ஆர்வமும், ஈர்ப்பும் உண்டு. ஸ்காட்லாந்தில் ஃபேஷன் துறை படித்தவர் கீர்த்தி. லண்டனில் இன்டர்ன்ஷிப்பும் சென்றுள்ளார். எதிர்காலத்தில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் துவங்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு.

* கீர்த்தி சுரேஷ் ஒரு மிகப் பெரிய விஜய் - சூர்யா ரசிகை. ஒருமுறை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சிறுவயதில் நான் பெரிய விஜய் ரசிகையாக இருந்தேன் என்றும், இப்போது விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் கூறி இருந்தார். அடுத்து சூர்யாவுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

* பள்ளி கல்லூரி காலக்கட்டத்தில் பல நாடகங்கள், நடனம் போன்றவற்றிலும் பங்கற்றுள்ளார்.

* கீர்த்தி சுரேஷ் சுத்த சைவம். தினமும் கார்டியோ பயிற்சிகள் செய்வதில் ஈடுபாடு கொண்டவர். யோகா பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார். பெரும்பாலும் தனது உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதில் நிறைய விருப்பம் காட்டுவார் கீர்த்தி.

English summary
Here is a compilation of some tidbits about actress Keerthi Suresh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil