»   »  கீர்த்தியோட ஆட்டம் விஜய்யுடன்தான்.. ஆனால் மனசு பூராம் சமந்தாவாம் #bairavaa

கீர்த்தியோட ஆட்டம் விஜய்யுடன்தான்.. ஆனால் மனசு பூராம் சமந்தாவாம் #bairavaa

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைரவா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் கத்தி, தெறி படங்களில் விஜய்யுடன் சமந்தா நடனம் ஆடியது போன்று சிறப்பாக ஆட வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறாராம்.

கீர்த்தி சுரேஷ் கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார். கீர்த்தியின் வரவால் ஸ்ரீதிவ்யாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

கீர்த்தி, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் ரிலீஸாக தயாராக உள்ளது.

பைரவா

பைரவா

கீர்த்தி தற்போது விஜய்யுடன் சேர்ந்து பைரவா படத்தில் நடித்து வருகிறார். இளைய தளபதி என்பதால் இந்த படம் தனது கெரியரில் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறார் கீர்த்தி.

விஜய்

விஜய்

விஜய் வில்லன்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. அதில் 3 பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டன.

டூயட்

டூயட்

விஜய், கீர்த்தி வரும் 2 டூயட் பாடல்கள் இன்னும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. அந்த பாடல்களை ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பரதன்.

டான்ஸ்

டான்ஸ்

கத்தி, தெறி படங்களில் சமந்தா விஜய்யுடன் அருமையாக நடனம் ஆடியிருந்தார். தற்போது பைரவாவில் சமந்தாவுக்கு நிகராக விஜய்யுடன் ஆட வேண்டும் என்பதை மனதில் வைத்து பயிற்சி எடுத்து வருகிறாராம் கீர்த்தி. விஜய் டான்ஸ் ஆடுவதில் வல்லவர் என்பதால் அவருக்கு ஈடு கொடுத்து ஆட பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தி.

English summary
Keerthi Suresh wants to dance like Samantha in her upcoming movie with Vijay titled Bairavaa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil