»   »  கீர்த்திக்கு டும்..டும்..

கீர்த்திக்கு டும்..டும்..

Subscribe to Oneindia Tamil


தமிழில் சில படங்களில் தலைகாட்டிவிட்டு காணாமல் போன கீர்த்தி ரெட்டிக்கும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் உறவினருக்கும் டும்..டும் கொட்டப் போகிறார்கள்.

ஆந்திராவைச் சேர்ந்த கீர்த்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மாடலிங் என ஒரு ரவுண்டு வந்தாலும் எங்கும் முன்னணிக்கு வர முடியவில்லை. வந்த வாய்ப்புக்களை எல்லாம் அள்ளிப் போட்டு சினிமாவில் நிலைக்க முயன்றார். முடியவில்லை.

இந் நிலையில் காதலில் விழுந்துவிட்டார் கீர்த்தி. தெலுங்கு புதுமுகம் சுமந்த் தான் கீர்த்தியின் காதலர். இவர் நாகர்ஜூனாவின் உறவினர். கீர்த்தியின் சகோதரரும் நாகர்ஜூனாவும் பிஸினஸ் பார்ட்டனர்கள் வேறு.

இதனால், காதலுக்கு பச்சைக் கொடி காட்டியதோடு இரு வீட்டிலும் பேசி கல்யாணத்தையும் ஏற்பாடு செய்துவிட்டார் நாகர்ஜூனா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்த தட்டை மாற்றிவிட்ட கையோடு, நாகர்ஜூனாவுக்கு சொந்தமான பாரில் பிரமாண்டமான தண்ணி பார்ட்டியும் நடத்தி திருமணம் நிச்சயமானதைக் கொண்டாடினார்கள்.

ஆகஸ்ட்டில் கல்யாணமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil