twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடக் கற்கும் கீர்த்தி

    By Staff
    |


    கலைஞரின் எழுத்து வண்ணத்தில் உருவாகும் உளியின் ஓசை படத்தில் நடிப்பதற்காக பரத நாட்டியத்தை நீக்கமறக் கற்க ஆரம்பித்துள்ளாராம் நாயகி கீர்த்தி சாவ்லா.

    Click here for more images

    30 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி எழுதிய காவியம் உளியின் ஓசை. இது இப்போது படமாகிறது. இளவேனில் இயக்குகிறார், இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வினீத் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லா, அட்சயா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

    படத்தின் கதைப்படி வினீத் சிற்பியாக வருகிறார், கீர்த்தி சாவ்லா பரதம் அறிந்த அழகியாக வருகிறார். கீர்த்திக்கு பரதம் ஓரளவு தெரியுமாம். இருந்தாலும் சமீப காலமாக அவரது திறமையை வெளிப்படுத்தும் வகையிலான வேடங்கள் கிடைக்காததால் பரதத்தை ஓரம்கட்டி வைத்திருந்தார். இதனால் பரதம் மறந்தே போய் விட்டதாம்.

    இப்போது உளியின் ஓசை படத்தில் பரதம் முக்கியப் பங்கு வகிக்கப் போவதால், டச் விட்டுப் போன நடனத்தை பேச்சப் செய்து கொள்வதற்காக கலாஷேத்ராவில் பரத வகுப்புக்குப் போக ஆரம்பித்துள்ளாராம் கீர்த்தி.

    ஏற்கனவே தெரிந்த டான்ஸ்தான் என்பதால் மறந்து போன பேசிக்குகளை மட்டும் கற்றுக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி. அவரது உடல் வாகுக்கும், அழகுக்கும் பரதம் அற்புதமாக வருவதாக கலாஷேத்ராவில் பெருமையாக கூறுகிறார்கள்.

    கலைஞரின் எழுத்தோசை, இசைஞானியின் இசையோசை இத்தோடு கீர்த்தியின் பரத ஓசையும் இணைந்து உளியின் ஓசை, படத்துக்கு உயிரோசையாக அமையும் என நம்பலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X