»   »  என்னாது, கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்கிறாரா?: நீங்க என்ன நினைக்கிறீங்க?

என்னாது, கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்கிறாரா?: நீங்க என்ன நினைக்கிறீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகையர் திலகமாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையை தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்குகிறார். இந்த படத்தில் சமந்தா சாவித்ரியாக நடிப்பதாக முதலில் கூறப்பட்டது.

Keerthy Suresh to act as Savitri?

அதன் பிறகே சமந்தா சாவித்ரியாக அல்ல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது. சாவித்ரியாக நித்யா மேனன் அல்லது பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு மகாநதி என்று பெயர் வைத்துள்ளார்களாம்.

படப்பிடிப்பு மே மாதம் துவங்க உள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that Keerthy Suresh is going to as Savitri in Nadigaiyar Thilagam's biopic to be directed by Nag Ashwin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil