மீண்டும் போலீஸ் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்...இப்போ யார் கூட தெரியுமா?

சென்னை : பல மொழிகளிலும் ஃபேமசான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

Recommended Video

Ponniyin Selvan பாடல் வெளியீட்டு விழாவில் Vikram கலந்துகொள்ளாததற்கு என்ன காரணம்! *Kollywood

இவர் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் இவர் நடித்த சாணி காயிதம், சர்காரு வாரி பட்டா , குட் லக் சகி, மரைக்கர் அரபிக்கடலிண்டே சிம்மம் உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை ரோலில் நடித்திருந்தார் இந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் மறுத்ததாகவும்,கீர்த்தி சுரேஷ் நடிக்க முடிவு செய்யப்பட்ட குந்தவை ரோலில் தான் தற்போது த்ரிஷா நடித்துள்ளார் என்றும் தகவல்கள் மீடியாக்களில் பரவி வருகின்றன.

கீர்த்தி சுரேஷ் தான் வேணும்

கீர்த்தி சுரேஷ் தான் வேணும்

ஆனாலும் இவரது நடிப்பு திறமையை பார்த்து பல பெரிய ஹீரோக்கள் மற்றும் டைரக்டர்களும் தங்கள் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் தான் வேண்டும் என கேட்டு வருவதால், மீண்டும் இவருக்கு பட வாய்ப்புக்கள் வர துவங்கி உள்ளன. கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி விட்டது.

கீர்த்தியின் அடுத்த பட ஹீரோ

கீர்த்தியின் அடுத்த பட ஹீரோ

ஹீரோ, விஸ்வாசம், அண்ணாத்த படங்களில் பணியாற்றிய ஆன்டனி பரத்வாஜ் தான் இந்த படத்தை இயக்குகிறார். ஜெயம் ரவியின் அடங் மறு, பூமி படங்களை தயாரித்த Home media makers தான் இந்த படத்தையும் தயாரிக்க போகிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 29 ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

மீண்டும் போலீஸ் ரோலில் கீர்த்தி

மீண்டும் போலீஸ் ரோலில் கீர்த்தி

லேட்டஸ்ட் தகவலின் படி, இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணி காயிதம் படத்தில் கான்ஸ்டபிள் ரோலில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது இரண்டாவது முறையாக காக்கி யூனிஃபார்ம் போட உள்ளார்.

தேடி வரும் பட வாய்ப்புக்கள்

தேடி வரும் பட வாய்ப்புக்கள்

மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்திலும் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஃபகத் ஃபாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி வருவதால் மீண்டும் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் உயர துவங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X