புது பிசினஸ் துவங்கிய கீர்த்தி சுரேஷ்...என்னன்னு தெரியுமா

சென்னை : சிறந்த நடிகை என தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கு, தமிழ் என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் செல்வராகவனுடன் சாணி காயிதம், ரஜினி நடிக்கும் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கை ரோலில் தான் நடித்துள்ளாராம். சாணி காயிதம் விரைவில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

keerthy suresh begins as an entrepreneur journey

இதே போல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்ததாக தெலுங்கில் ரீமேக் ஆகும் அஜித் நடித்த வேதாளம் படத்தில் ஹீரோ சிவஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் இந்த ரோலில் லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் நியூஸ் காத்திருக்கு, இந்த வார இறுதியில் பெரிய அறிவிப்பு என பதிவிட்டதுடன், கையில் மூலிகைகள் பொருட்கள் வைத்திருப்பது போன்ற ஃபோட்டோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் இது ஏதோ புது விளம்பரம் போல என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் இது விளம்பரத்தில் நடிப்பதற்கானது அல்ல. தான் துவங்கும் புதிய பிசினசிற்கான விளம்பரம் என விளக்கம் அளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ஆமாம். முழுக்க முழுக்க இயற்கை அழகை மையமாகக் கொண்ட அழகு பொருட்கள் விற்பனை பிசினசை தான் கீர்த்தி சுரேஷ் நேற்று துவங்கி உள்ளார். பூமித்ரா என்ற தனது இயற்கை அழகு பொருட்களுக்கு பெயரிட்டுள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், காத்திருப்பு முடிந்தது. எனது சொந்த நிறுவனமான பூமித்ரா அழகு பிராண்ட் துவங்கியது. எனது சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார். டிசைனர் ஷில்பா ரெட்டி மற்றும் தொழிலதிபர் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து இந்த தொழிலை கீர்த்தி சுரேஷ் துவங்கி உள்ளார்.

இது பற்றி வீடியோ ஒன்றையும் கீர்த்தி சுரேஷ் போஸ்ட் செய்துள்ளார். அதில், எனது ஸ்கின் பிராண்டை துவக்க கிட்டதட்ட 4 மாதங்கள் வேலை செய்தேன். எனது தயாரிப்புகள் முற்றிலும் தூய்மையான, இயற்கையானவை. பூமித்ரா தயாரிப்புகளில் இயற்கையான பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.

இதற்காக தனியாக இணையதளம் ஒன்றையும் கீர்த்தி சுரேஷ் துவங்கி உள்ளாராம். www.bhoomitra.store என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை பார்த்து, அதில் வாங்கவும் செய்யலாம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தனது இந்த புதிய பிசினசிற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X