நாட்டு நாட்டு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் போட்ட செம ஆட்டம்...அதுவும் யாருடன் தெரியுமா ?

ஐதராபாத் : ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் செம ஹிட் பாடலான நாட்டு நாட்டு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் போட்ட ஆட்டம் தான் சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆகி உள்ளது. அதுவும் அவருடன் ஆடியவரை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.

Recommended Video

நாட்டு நாட்டு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் போட்ட செம ஆட்டம்...அதுவும் யாருடன் தெரியுமா ?

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது குட் லக் சகி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 28ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

குட் லக் சகி படத்தின் கதை

குட் லக் சகி படத்தின் கதை

விளையாட்டை மையமாகக் கொண்ட படம் தான் குட் லக் சகி. கிராமத்தில் உள்ள அனைவராலும் துரதிர்ஷ்டசாலி என சொல்லப்படும் கீர்த்தி சுரேஷ், எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து, தேசிய அளவில் சாம்பியன் ஆகி, அனைவரும் அதிர்ஷ்டசாலி என சொல்லும் அளவிற்கு மாறுகிறார். இது தான் படத்தின் கதை. கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் ஆதி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் வைத்த கோரிக்கை

கீர்த்தி சுரேஷ் வைத்த கோரிக்கை

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் தெலுங்கு திரையுலககை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு, படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம்சரணும், கீர்த்தி சுரேஷின் நடிப்பை மிகவும் பாராட்டி பேசினார். அவர் பேசி முடித்ததும், அவருடன் ஒரு ஸ்டெப்பாவது போட வேண்டும் என கீர்த்தி சுரேஷ் கேட்டுக் கொண்டார்.

நாட்டு நாட்டு பாடலுக்கு செம ஆட்டம்

நாட்டு நாட்டு பாடலுக்கு செம ஆட்டம்

இதனால் ராம் சரண் நடித்து, ரிலீசுக்காக காத்திருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் செம ஹிட் பாடலான நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரணும், கீர்த்தி சுரேஷும் நடனம் ஆடினர். ராம்சரண், ஜுனியர் என்டிஆர் சேர்ந்து போட்ட ஸ்டெப்பை ராம்சரணுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் போட்டார். இதை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கூச்சலிட்டனர். நாட்டு நாட்டு பாடலுக்கு ராம் சரணும், கீர்த்தி சுரேஷும் ஆடிய வீடியோ காட்டுத்தீயாய் பரவி, டிரெண்டிங் ஆனது.

டிரெண்டிங் ஆன கீர்த்தி சுரேஷ்

டிரெண்டிங் ஆன கீர்த்தி சுரேஷ்

இந்த வீடியோ குட் லக் சகி படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்துள்ளது. அதே சமயம் கீர்த்தி சுரேஷிற்குள் இப்படி ஒரு நடன திறமையா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர். இதனால் டாப் ஹீரோக்களை போல் கீர்த்தி சுரேஷ் ஹேஷ்டேக்கையும் உருவாக்கி, அவரது ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கினர். லெமன் எல்லோ லெஹங்காவில் கீர்த்தி சுரேஷ் ஆடிய இந்த வீடியோவை அதிகமானவர்கள் பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X