நீங்க தான் தளபதி 66 ஹீரோயினா? கீர்த்தி சுரேஷ் சொன்ன க்யூட் பதில்
சென்னை : விஜய் தற்போது தனது 65 வது படமாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் இரண்டு நாட்களுக்கு முன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் பாதி நிறைவடைவதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருமொழிகளில் தளபதி 66
தளபதி 66 படத்தின் மூலம் விஜய் தெலுங்கு திரையுலகிலும் என்ட்ரியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகளுக்கான தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

எப்போ ரிலீஸ்
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட உள்ள இந்த படம் ஒரே சமயத்தில் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளதாம். பீஸ்ட் படத்தின் வேலைகள் முடிந்த பிறகு தளபதி 66 பட வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். பீஸ்ட் படம் 2022 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கும், தளபதி 66 2022 ம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.

ஹீரோயின் கீர்த்தி சுரேஷா
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வதந்திகள் பரவின. விஜய்யின் பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்ததால் மூன்றாவது முறையாக விஜய்யுடன் அவர் ஜோடி சேர உள்ளதாக கூறப்பட்டது. இதே போல் தளபதி 66 ஹீரோயின் பட்டியலில் ராஷ்மிகா மந்தனாவின் பெயரும் அடிபடுகிறது.
Recommended Video

தளபதி 66 ல் நானா
ஆனால் தெலுங்கு சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் இந்த வதந்திகளை மறுத்துள்ளார். தளபதி 66 ல் நான் எந்த ரோலிலும் நடிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பேட்டியின் வீடியோ கிளிப்பிங் சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











