என்னாது கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? டாப் நடிகைகளுடன் கேர்ள்ஸ் நைட் பார்ட்டி கொண்டாடி இருக்காரே!

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் பிறந்த தனது அப்பா அம்மாவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார்.

இந்நிலையில், பிரபல கேரள நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ் கொண்டாடிய கேர்ள்ஸ் நைட் பார்ட்டி புகைப்படங்கள் தற்போது வெளியாகி தீயாக பரவி வருகிறது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அதிதி பாலன், பிரக்யா மார்ட்டின் உள்ளிட்ட பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

மிஸ் பண்ண கீர்த்தி சுரேஷ்

மிஸ் பண்ண கீர்த்தி சுரேஷ்

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நடிகை கீர்த்தி சுரேஷ் மிஸ் செய்தது அவருக்கு பெரிய சரிவை ஏற்படுத்தி விட்டது. குந்தவை வாய்ப்பை தட்டித் தூக்கிய நடிகை த்ரிஷா அடுத்து தளபதி 67 மற்றும் ஏகே 62 ஹீரோயின் ஆகப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நானியுடன் நடித்து வரும் தசரா படம் தனக்கு கை கொடுக்கும் என கீர்த்தி சுரேஷ் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

அப்பா அம்மா பிறந்தநாள்

அப்பா அம்மா பிறந்தநாள்

கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் முன்னாள் நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ஒரே நாளில் பிறந்த தனது அம்மா மற்றும் அப்பா இருவரது பிறந்தநாளை வீட்டில் செம கிராண்டாக கொண்டாடி இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கேர்ள்ஸ் நைட் பார்ட்டி

கேர்ள்ஸ் நைட் பார்ட்டி

இந்நிலையில், பிரபல கேரள நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ் கேர்ள்ஸ் நைட் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. என்ன திடீரென கீர்த்தி சுரேஷ் இத்தனை நடிகளுடன் பார்ட்டி கொண்டாடி உள்ளார். ஒருவேளை அப்படி இருக்குமோ என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா

நடிகை கல்யாணி பிரியதர்ஷன், பார்வதி, அதிதி பாலன், பிரக்யா மார்ட்டின், அனா பென், உள்ளிட்ட பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். கல்யாணி பிரியதர்ஷனின் அம்மா லிஸி பிரியதர்ஷனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் பேச்சுலர் பார்ட்டி போல சக நடிகைகளுக்கு கீர்த்தி சுரேஷ் திருமண பார்ட்டி வைத்திருக்கிறாரா? விரைவில் அறிவிப்பு வருமா என்றெல்லாம் கமெண்ட் போட்டு கேட்டு வருகின்றனர்.

நடிகைகளுக்கு திருமணம்

நடிகைகளுக்கு திருமணம்

இந்த ஆண்டு ஏகப்பட்ட தமிழ் சினிமா நடிகைகள் திருமணம் செய்து வருகின்றனர். நிக்கி கல்ராணி, நயன்தாரா திருமணங்களை தொடர்ந்து ஹன்சிகா திருமண அறிவிப்பு வெளியானது. தற்போது நடிகை தமன்னாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அடுத்து அந்த பட்டியலில் இருக்கும் கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ராதிகா சரத்குமார் பங்கேற்பு

ராதிகா சரத்குமார் பங்கேற்பு

இந்த கேர்ள்ஸ் நைட் பார்ட்டி நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை நிற வெஸ்ட்டர்ன் உடையில் ஜொலித்தார். நடிகை ராதிகா சரத்குமாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது. "A beautiful night with beautiful people." என்பதை மட்டுமே கேப்ஷனாக கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ள நிலையில், எதற்காக இந்த பார்ட்டி என்பது சீக்கிரமே தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X