»   »  2 படம் ஹிட்டானதுமே சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ்?

2 படம் ஹிட்டானதுமே சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டு படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.

இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த படம் அவருக்கு ஒர்க்அவுட்டாகவில்லை. இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நடித்த ரஜினி முருகன், ரெமோ படங்கள் ஹிட்டாகின.

Keerthy Suresh is too costly?

ரஜினி முருகனுக்கும் ரெமோவுக்கும் இடையே வெளியான தொடரி ஊத்திக் கொண்டது. இரண்டு படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ள நிலையில் கீர்த்தி விஜய், சூர்யா படங்களில் ஒப்பந்தமானார்.

தனது மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளதை உணர்ந்துள்ள கீர்த்தி சம்பளத்தை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளாராம். கீர்த்தி ஒரேயடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதால் அவரை புக் பண்ண நினைத்த தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம்.

Keerthy Suresh is too costly?

இவருக்கு ரூ.1 கோடி கொடுப்பதற்கு வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமா என்று தயாரிப்பாளர்கள் யோசனையில் உள்ளார்களாம்.

English summary
According to reports, Keerthy Suresh has increased her salary from Rs. 40 lakh to Rs. 1 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil