Don't Miss!
- Finance
உணவு நெருக்கடியால் குழந்தைகளுக்கு பிரச்சனை.. நோபல்பரிசு பெற்ற நிபுணர் பகீர்!
- News
ஓபிஎஸ் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று.. அதிமுக வங்கி கணக்குகள் கையாள வாய்ப்பா? தீர்ப்பு கூறுவது என்ன?
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Sports
"சச்சினுக்கு எல்லாமே தெரியும், ஆனா.. ".. வறுமையில் வாடி தவிக்கும் வினோத் காம்ப்ளி.. ரசிகர்கள் சோகம்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
'அதுக்கு கண்டிப்பாகப் பழிவாங்கப்படும்..' தனது துபாய் ஸ்குவாடுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜில் போஸ்!
சென்னை: ஷூட்டிங்கிற்காக துபாய் சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், அங்கு தனது ஸ்குவாடுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார், நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள அவர், ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன், சாணி காயிதம் படங்களில் நடித்து வருகிறார்.
'இது அதுக்கும் மேல நட்பு..' அந்த இளம் ஹீரோவுடன் நெருக்கமான ஹீரோயின்.. பரபரக்கும் கோடம்பாக்கம்!

மிஸ் இந்தியா
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அங்கு அவர் நடித்த மிஸ் இந்தியா படம், ஒடிடி தளத்தில் வெளியானது. இதற்கிடையில் நிதின் நடிக்கும் ரங் தே என்ற படத்தில் அவர் இப்போது நடித்து வருகிறார். கொரோனாவுக்குப் பிறகு இதன் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.

கண்களை துணியால்
இதன் பாடல் காட்சி ஷூட்டிங், துபாயில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் படப்பிடிப்புக்கு இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் கீர்த்தி சுரேஷ், சேரில் அமர்ந்தபடி கண்களில் துணியை வைத்து மறைத்துக் கொண்டு அப்படியே சாய்ந்து செல்லத் தூக்கம் போட்டார்.

ஷாட்டுக்கு இடையில்
ஹீரோ நிதின், இயக்குனர் வெங்கி அட்லுரி இருவரும் அவர் அருகே சென்று அதை செல்ஃபி எடுத்து, சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். 'நாங்கள் வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்போது, ஷாட்டுக்கு இடையில் கீர்த்தி சுரேஷ் ரிலாக்ஸ் செய்கிறார் என்று கூறி இருந்தார் நிதின். இந்த போட்டோ வேகமாக பரவியது.

இதற்குப் பழிவாங்கப்படும்
இதற்கு, பிறகு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ், 'படப்பிடிப்புக்கு இடையில் செட்டில் தூங்கக் கூடாது என்று கற்றுக்கொண்டேன். அவர்களுக்கு பொறாமை. இதற்கு பழிவாங்கப்படும் எனக் கூறியிருந்தார். இதற்கு கமென்ட் பதிவு செய்த, நடிகை மாளவிகா மோகனன், 'கடுமையாக உழைக்கும் நடிகை என்று கூறியுள்ளார்.

துபாய் ஸ்குவாட்
இந்நிலையில், துபாயில் உள்ள தனது தோழிகளை சந்தித்திருக்கிறார், கீர்த்தி சுரேஷ். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள அவர், தனது துபாய் ஸ்குவாட் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது.

ஏராள நெட்டிசன்ஸ்
இதில் நடிகை கீர்த்தியின் அழகை வர்ணித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அழகுன்னா என்னன்னு கேட்டாங்க, நான் உங்க படத்தை காட்டினேன் என்று ஒருவர் கவிதையாகக் கூறியிருக்கிறார். ரசிகர்களுக்கு ஹாய் சொல்லமாட்டீங்களா? அக்கா நான் உங்க தீவிர ரசிகன் என்பது போல ஏராளமான நெட்டிசன்ஸ் கூறியுள்ளர்.