என்ன அழகு...மரைக்கரில் தனது கேரக்டர் ரகசியத்தை உடைத்த கீர்த்தி சுரேஷ்

திருவனந்தபுரம் : மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் மரைக்கர் அரபிக்கடலின்டே சிம்மம். இந்த படம் தியேட்டரில் டிசம்பர் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த படம் உள்ளது.

இந்த படத்தில் அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், முகேஷ், சித்திக், நெடுமுடி வேணு, பிரணவ் மோகன்லால் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ரிலீசுக்கு முன்பே விருது

ரிலீசுக்கு முன்பே விருது

படம் ரிலீசாவதற்கு முன்பே இந்த படம் பல விருதுகளை வென்று விட்டது. 67 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளுக்காக விருதுகளை வென்றுள்ளது மரைக்கர் படம்.

ரகசியத்தை சொன்ன கீர்த்தி

ரகசியத்தை சொன்ன கீர்த்தி

இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட மலையாள படம் இது தானாம். ஏற்கனவே இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியாகி படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டி உள்ளது. பாரம்பரிய மலையாளப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் தோன்றி அனைவரின் மனங்களையும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் தனது கேரக்டரின் பின்னணி ரகசியத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அட செம அழகு

அட செம அழகு

மரைக்கர் படத்தில் ஆர்சா என்ற ரோலில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் தனது கேரக்டரில் கெட்அப்புகளுக்கு அடிப்படை ஆதாரமாக இருந்த சில ஃபோட்டோக்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். பிரபல ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களின் நிஜ மாதிரியாகவே கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் தோன்றி உள்ளாராம்.

Recommended Video

Blue Sattai Maran Anti Indian Film Update | Suresh Chakravrthy | Filmibeat Tamil
இது தான் காரணமா

இது தான் காரணமா

இந்த ஃபோட்டோக்களுடன் மரைக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் படத்தில் ஆர்சா லுக்கிற்கு பின்னணியில் இருக்கும் ஊக்கசக்தி இது தான். இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். பழங்கால ராணிகளின் லுக்கில் கீர்த்தி சுரேஷின் இந்த ஃபோட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X