தெரு நாயுடன் கீர்த்தி சுரேஷ்.. என்ன செய்றாரு பாருங்க?.. ரசிகர்கள் செய்யும் அட்வைஸ்

சென்னை: கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் நடிக்கும் முடிவில் இருந்தாலும் அவருக்கு போதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இது ஒருபக்கம் இருக்க அடிக்கடி அவுட்டிங் செல்லும் கீர்த்தி; தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

சினிமா பின்னணியுள்ள குடும்பத்தை சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தனது தாய் மேனகா போலவே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த அவருக்கு தமிழில் ரஜினி முருகன் திரைப்படம்தான் முதல் ஹிட்டாக அமைந்தது. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்து ஹிட்டுகளை கொடுத்த அவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற இடத்தை அடைந்தார்.

ஹிந்தியில் கீர்த்தி: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நடித்த கீர்த்திக்கு மகாநடி படத்துக்காக தேசிய விருது கிடைத்தது. இருப்பினும் அந்தப் படத்துக்கு பிறகுதான் தனக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும் அவரே ஒரு பேட்டியில் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது. நிலைமை இப்படி இருக்க தமிழில் அவருக்கு மாமன்னன் திரைப்படம் நல்ல கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து ஹிந்தியில் பேபி ஜான் படத்தில் நடித்தார்.

Keerthy Suresh shared a video of herself with a stray dog on Instagram
Photo Credit:

முரட்டு அடி: தமிழில் வெளியாகி மெகா ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகியிருந்தது. அட்லீதான் தயாரித்திருந்தார். இந்தப் படத்தை ஹிட்டாக கொடுத்து பாலிவுட்டிலும் தனக்கான மார்க்கெட்டை பிடிக்கும் உத்வேகத்தில் இருந்த கீர்த்தி சுரேஷுக்கு பேபி ஜான் திரைப்படம் படுதோல்வியைத்தான் கொடுத்தது. இதற்கிடையே அவர் காதலிலும் விழுந்திருந்தார். பத்து வருடங்களுக்கும் மேலாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்துவந்த அவர் கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

படங்கள் பெரிதாக இல்லை: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் முடிவில்தான் இருக்கிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக உப்பு கப்புரம்பு படத்தில் நடித்தார். அதுவும் தோல்விதான். அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகவிருக்கிறது. இந்த இரண்டு படங்கள் தவிர்த்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது. இருப்பினும் கதைகளை அவர் தொடர்ந்து கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாவில் ஃபோட்டோஸ்: ஒருபக்கம் நடிப்பில்,கதைகள் கேட்பதில் பிஸியாக இருக்கும் அவர்; மறுபக்கம் அடிக்கடி அவுட்டிங்கும் செல்கிறார். அப்படி செல்லும்போதெல்லாம் அதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் இப்போது சில ஃபோட்டோஸை பகிர்ந்திருக்கிறார். அவற்றில் ஒன்றில் தெரு நாயை கொஞ்சம்படி வீடியோவும் இருக்கிறது. ஏற்கனவே தெரு நாய்களால் மனிதர்கள் அதிகளவு தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, நாயிடம் ஜாக்கிரதையாக இருங்கள் கீர்த்தி மேடம் என்று அட்வைஸும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X