புருஷனுக்கு கோபம் வராதா?.. ஒரு இடம் விடல.. கீர்த்தி சுரேஷை பாடாய்ப்படுத்தும் செல்ல நாய்க்குட்டி!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் காலையில் உடற்பயிற்சி செய்யும் போது அவரது செல்ல நாய்க்குட்டி அவரது முகத்தில் ஒரு இடம் விடாமல் நக்கி எடுத்து பாடாய்ப்படுத்தி விளையாடும் வீடியோவை அவர் சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகைகள் நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடுவது ஒன்றும் புதுமையான விஷயமல்ல, சில நடிகைகளின் உள்ளாடைகளில் இருந்தே நாய்க்குட்டிகள் வெளியே விளையாடிக் கொண்டே வரும் வீடியோக்களும் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளன.

ஆனால், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கீர்த்தி சுரேஷின் புதிய வீடியோ வெளியாகி பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
கீர்த்தி சுரேஷுடன் விளையாடும் நாய்க்குட்டி: கீர்த்தி சுரேஷின் செல்லப்பிராணியான நிக்கி(Nyke) நாய்க்குட்டி செம சேட்டை பிடித்த ஒன்று என்பது நடிகையின் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான். நைக் உடன் அவர் ஏகப்பட்ட வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கே செம காண்டாகி விட்டது.
முகத்தில் ஒரு இடத்தையும் விடல: கீர்த்தி சுரேஷின் கன்னங்கள், உதடு, நெற்றி, கழுத்து என முகத்தில் ஒரு இடத்தையும் விடாமல் அவரது செல்ல நாய்க்குட்டி நக்கியும் முத்தம் கொடுத்தும் விளையாடும் வீடியோவை சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். அந்த நாயாகவாவது நான் பிறந்திருக்கக் கூடாதா என சில ரசிகர்கள் புலம்பி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
புருஷனுக்கு கோபம் வராதா?: நடிகை கீர்த்தி சுரேஷ் பல வருடங்களாக காதலித்து வந்த அண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு கோவாவில் திருமணம் செய்துக் கொண்டார். ஆண்டனிக்கே இந்த வீடியோவை பார்த்தால் நைக் மீது கொலை காண்டு ஆகிவிடுவார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் ரூட் தயாரிப்பாளர் ஜெகதீஷ் தயாரிப்பில் நடித்த ரிவால்வர் ரீட்டா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும் வெளியாகவில்லை. நெட்பிளிக்ஸ் அறிவித்த அக்கா வெப்சீரிஸும் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்ததாக மிஷ்கின் உடன் இணைந்து ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











