»   »  ஓவர் சீன் போடும் கீர்த்தி சுரேஷ்: கடுப்பில் டோலிவுட்

ஓவர் சீன் போடும் கீர்த்தி சுரேஷ்: கடுப்பில் டோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் கீர்த்தி சுரேஷ் ஓவர் அலப்பரை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டத்தில் சேர்ந்துள்ளார். கார்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Keerthy Suresh throws tantrums

தெலுங்கில் அவர் நானியுடன் சேர்ந்து நேனு லோக்கல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் எல்லாம் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வந்த கீர்த்தி பவன் படத்தில் ஒப்பந்தமானதில் இருந்து ஓவர் அலப்பரை செய்கிறாராம்.

படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறாராம். வந்து கேரவனுக்குள் செல்பவர் வெளியே எப்பொழுது வருவார் என்பது யாருக்கும் தெரியாதாம். அவர் வரும் வரை படக்குழு கேரவன் பக்கமாக வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கிறதாம்.

ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனதிற்கே இப்படியா என்று தெலுங்கு திரையுலகினர் கீர்த்தி மீது கடுப்பில் உள்ளார்களாம்.

English summary
Buzz is that Keerthy Suresh is throwing tantrums after signing a project with Power Star Pawan Kalyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil