»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பானுப்பிரியாவும், வசுந்தரா தாஸும் மலையாளக் கரையோரம் ஒதுங்கி விட்டார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பானுப்பிரியா திடீர் கல்யாணம் செய்து கொண்டு "செட்டிலானார்". அதன் பிறகு கணவருடன் ஏற்பட்டமன வேறுபாடு காரணமாக தனித்து வந்தார். அவருக்கு ஏவி.எம் நிறுவனம் ஆதரவு கொடுத்து தனது ஸ்டுடியோவிலேயே தங்க வைத்தது. அங்கு தங்கிக்கொண்டு ஏவி.எம்மின் மெகா டி.வி. சீரியலில் நடித்தார் பானுப்பிரியா.

சீரியல் முடிந்த பிறகு ஏவி.எம். ஸ்டுடியோரை விட்டு வெளியே வந்தார். ஜெயா டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்த புக் ஆனார். ஆனால் திடீரென அவரைமாற்றியது ஜெயா டிவி. அவருக்குப் பதில் ஷோபனாவை ஒப்பந்தம் செய்தது.

வெறுத்து போன பானுவுக்கு மனோபாலாவின் நைனா படத்தில் அசத்தலான வேடம் அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்விரைவில் வெளியாகவுள்ளது. இந் நிலையில் மலையாளத்தில் பல படங்கள் அவரைத் தேடி வந்துள்ளன.

எனவே இப்போதைக்கு மலையாளப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் பானுப்பிரியா.

அதேபோல ஹே ராமில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தும், சில படங்களில் கொஞ்சு மொழியில் பாடியும்வந்த பெங்களூர் வசுந்தரா தாசும் மலையாளத்தில் புகுந்து விட்டார். அவருக்கு கை நிறையப் படங்கள் உள்ளதாம்.சம்பளம் குறைவாக இருந்தாலும் முத்தக் காட்சி, நெருக்கக் காட்சிகள் இல்லை. இதனால் மலையாளமே போதும்என்று கூறி வருகிறாராம் (எல்லாம் கமல் படுத்திய பாடு?).

எங்கிருந்தாலும் வாழ்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil