வெறி பிடித்த தம்பிகளா ?தம்பதிகளா ? ஸ்டாலினிடம் புகாருக்கு போன குஷ்பூ..! ஆனால் நடந்ததோ?

சென்னை : சினிமாவிலும் சரி, அரசியலுக்கு வந்த பிறகும் சரி பலரின் ஃபேவரைட் ஸ்டாராக இருப்பவர் குஷ்பு. திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து தற்போது பாஜக.,வில் இருந்து வருகிறார் குஷ்பு. பாஜக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார்.

தேர்தலுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியான குஷ்பு, ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் நடித்தார். சின்னத்திரையிலும் சீரியலில் கெஸ்ட் ரோல், ரியாலிட்டி ஷோ நடுவர் என ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஸ்லிம்மான குஷ்பு

ஸ்லிம்மான குஷ்பு

அண்ணாத்த படத்திற்கு பிறகு உடல் எடையை செமையாக குறைத்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் குஷ்பு. தொடர்ந்து ஸ்லிம்மான ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாக்களிலும் பகிர்ந்தார். இதைத் பார்த்த சிலர் குஷ்புவிற்கு லவ் ப்ரொபோசே செய்து விட்டனர். மீண்டும் ஹீரோயினாக நடிக்க போகிறீர்களா, சின்னதம்பி 2 வர போகிறதா என பலரும் கேட்டு விட்டனர்.

பாஜக.,வை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பாஜக.,வை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இதற்கிடையில் ட்விட்டரிலும் அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார் குஷ்பு. இந்நிலையில் சென்னை மழை, வெள்ளத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கட்சியினர் படகில் சென்று எடுத்த வீடியோ இணையத்தில் செம வைரலானது. இதை வைத்து பாஜக.,வை பலரும் வருத்தெடுத்தனர்.

தம்பிகளா, தம்பதிகளா மேடம்

தம்பிகளா, தம்பதிகளா மேடம்

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலினிடம் கூறுவதாக குஷ்பு ஒரு ட்வீட் போட்டுள்ளார் நேற்று. அதில் தம்பிகள் என்பதற்கு பதிலாக தம்பதிகள் என தவறாக பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் செமயாக கலாய்த்து வருகின்றனர். குஷ்புவின் இந்த ட்வீட் படு வைரலாகி வருகிறது.

வைரலாகும் ட்வீட்

வைரலாகும் ட்வீட்

குஷ்பு தனது ட்வீட்டில், ஷ்ஷ்ஷ்பப்பா...இந்த வெறி புடிச்ச சில தம்பதிகள் இருக்காங்களே...மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ப்ளீஸ் அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்கள். பெரும்பாலனவர்கள் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தான். வேலை இல்லாமே இருக்காங்க நல்லா தெரியுது என குறிப்பிட்டுள்ளார். சில எழுத்து பிழைகளுடன் பதிவாகி உள்ள இந்த ட்வீட்டை பார்த்து, யாரை மேடம் சொல்றீங்க என பலர் கேட்டுள்ளனர்.

அக்காவுக்கு கொஞ்சம் சுத்தல்

அக்காவுக்கு கொஞ்சம் சுத்தல்

தம்பிகளா, தம்பதிகளா மேடம் என கேட்டுள்ளனர். மேடம் குஷ்பூ, நீங்க என்ன அடுத்த ரவுண்டுக்காக பிஜேபியை விட்டுட்டு "சொல்வதெல்லாம் உண்மை" மாதிரி எதாவது புரோகராம் பண்ண போறிங்களா? உங்க வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கே...தம்பிகள தான் தம்பதிகள் ன்னு எழுதி இருக்காங்க..பாஜக போனதுல இருந்து..அக்காவுக்கு கொஞ்சம் சுத்தல்தான் என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.

சரி செய்யுங்க மேடம்

சரி செய்யுங்க மேடம்

என்ன மேடம் பண்றது, ஒரு கட்சியில அந்த மேடையில பேசிட்டு அடுத்த வாரமே மற்றொரு கட்சியில சேரும் தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்யத்தெரியாத தம்பதிகள் கஷ்டப்படத்தான் செய்வாங்க. மக்கள் பணியில் உடன் பிறப்புகள் அருமையாக செயல் படுகிறார்கள்,உங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிடுகிறார்கள் அதை முதலில் சரி செய்யுங்கள் என சிலர் காட்டமாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X