என்னது...ஃபோட்டோ எடிட்டிங்கால் ஸ்லிம் ஆனேனா...ரசிகருக்கு நச்சுன்னு பதில் கொடுத்த குஷ்பு

சென்னை : 1990 களில் துவங்கி தற்போது வரை எவர்க்ரீன் நடிகையாக இருந்து வருபவர் குஷ்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தனக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் என்றுமே குறையாது என மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் குஷ்பு.

குஷ்பு, தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்ணாத்த படத்தின் வேலைகளை முடித்த பிறகு மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் குஷ்பு.

சின்னத்திரையில் ரீஎன்ட்ரி

சின்னத்திரையில் ரீஎன்ட்ரி

கோகுலத்தில் சீதை சீரியல் மூலமாக தான் குஷ்பு, சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் மங்கலம் என்ற டாக்டர் கேரக்டரில் குஷ்பு நடிக்கிறார். இது சிறப்பு தோற்றம் என்றாலும் மிக முக்கியமான கேரக்டராம். இதைத் தொடர்ந்து டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் என்ற நடன ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக செயல்பட உள்ளார்.

சினிமாவிலும் பிஸி

சினிமாவிலும் பிஸி

தற்போது தனது கணவர் சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் நடித்து வரும் குஷ்பு, விரைவில் தானே தயாரிக்கும் மெகா சீரியலில் லீட் ரோலில் நடிக்கவும் தயாராகி வருகிறார். சில படங்களில் நடிக்கவும் குஷ்புவிடம் பேசப்பட்டு வருகிறதாம்.

ஸ்லிம்மான குஷ்பு

ஸ்லிம்மான குஷ்பு

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் படுஆக்டிவான குஷ்பு, தனது ஃபோட்டோக்கள், வீடியோக்களை அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி சமீபத்தில் அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாகி விட்டார் குஷ்பு. இந்த ஃபோட்டோக்களை குஷ்பு, சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார்.

ப்ரொபோஸ் செய்த ரசிகர்

ப்ரொபோஸ் செய்த ரசிகர்

கடுமையாக உடற்பயிற்சி செய்து குஷ்பு உடல் எடையை குறைத்துள்ளதை பலர் வியப்பாகவும், பாராட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர் ஒருவர், குஷ்புவின் ஸ்லிம் ஃபோட்டோவை பார்த்து விட்டு ப்ரொபோசே செய்து விட்டார்.

20 வருஷம் லேட்

20 வருஷம் லேட்

அதற்கு கூலாக பதிலளித்த குஷ்பு, நீங்கள் 20 ஆண்டுகள் லேட். எதற்கும் என் கணவரிடம் கேட்டு சொல்கிறேன். அவர் என்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார் என பதிலளித்திருந்தார். குஷ்புவின் இந்த பதில் செம வைரலானது.

Recommended Video

Kushboo -வை கலாய்த்த Netizen பதிலடி கொடுத்த குஷ்பு | Super Deluxe Shilpa
ஃபோட்டோ எடிட் டூலா

ஃபோட்டோ எடிட் டூலா

இந்நிலையில் விடாத அந்த ரசிகர், இதில் ஒன்றுமில்லை. இப்போதெல்லாம் ஃபோட்டோ எடிட் டூல் மூலம் எதுவும் சாத்தியம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த குஷ்பு, நீங்களும் முழுக்க முழுக்க தாழ்வு மனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நிரம்பியவர் என்பதற்கான உதாரணமாக இருக்கிறேன். உங்களுக்காக பரிதாப படுகிறேன் என பதிலளித்துள்ளார்.

குஷ்புவின் இந்த ஸ்மார்ட் பதில் செம வைரலாகி வருகிறது. இதற்கு பாராட்டுக்களும், லைக்குகளும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X